27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
prawn gravy 1671263860
சமையல் குறிப்புகள்

இறால் கிரேவி

தேவையான பொருட்கள்:

* இறால் – 1/2 கிலோ

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* தக்காளி – 2

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – 5

* கொத்தமல்லி – சிறிதுprawn gravy 1671263860

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து, மசாலா இறாலில் நன்கு ஒன்றுசேரும் வரை வதக்க வேண்டும்.

* அடிபிடிப்பது போன்று இருந்தால், கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் இறாலை வேக வைக்க வேண்டும்.

* இறாலானது சுருங்கி, சுருண்டு வட்ட வடிவில் மாறும் போது, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடுங்கள். இப்போது சுவையான இறால் கிரேவி தயார். அளவுக்கு அதிகமாக இறாலை வேக வைக்க வேண்டாம். இல்லாவிட்டால் அது ரப்பர் போன்றாகிவிடும்.

Related posts

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan

இனியெல்லாம் ருசியே! – 4

nathan

கலர்பொடி சேர்க்காமல் கிரேவியில் நிறத்தை கொண்டு வரமுடியுமா?

nathan

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika

சூப்பரான முட்டை ப்ரைடு ரைஸ்!

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

வீட்டிலேயே செய்யலாம் மலபார் பரோட்டா

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan