24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
p12a
ஆரோக்கியம் குறிப்புகள்

கைசுத்தம் காப்போம்!

‘சுத்தம் சோறுபோடும்’ என்பது நம் பழமொழி. ஆனால், அசுத்தமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம். `கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே பெரும்பாலான நோய்கள் அண்டாது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அசுத்தமான பொருட்களைத் தொடுவது, அழுக்கான இடங்களில் கையைவைப்பது, புழுதி படிந்த வாகனங்களைப் பயன்படுத்துவது, வெறும் கைகளால் மூக்கு சிந்துவது, கைகளால் முகத்தைத் தேய்ப்பது, தலையைக் கோதுவது, சுத்தம் செய்யப்படாத கீ போர்டு, செல்போனைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கைகள் அசுத்தமாகின்றன. குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, கைக்குக் கிடைத்ததை எல்லாம் எடுப்பது போன்ற சேட்டைகளால் எளிதாகக் கைகளை அசுத்தமாக்கிக்கொள்வார்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் சாப்பிடும் முன்னரும், சாப்பிட்டு முடித்ததும் கண்டிப்பாக சோப்பால் கை கழுவ வேண்டும். ஆனால், இதை எல்லாம் யாரும் செய்வது இல்லை. சுத்தம் என்பது நமக்கு பேச்சு அளவில் மட்டுமே உள்ளது. உண்மையில், சுத்தமாக இருக்க, ஒவ்வொரு நாளும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கை கழுவுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். கை கழுவுவது என்றால் வெறுமனே குழாய் தண்ணீரில் கையை நீட்டிவிட்டு, பின்னர் கையில் இருக்கும் ஈரத்தை சட்டை, பேன்ட்டில் துடைத்துக்கொண்டு செல்வது அல்ல. எப்படிக் கை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வதைக் கேட்போமா…
p12a
p13a

Related posts

கட்டாயம் இதை படியுங்கள் பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெட்டிவேரை வீட்டின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக காட்டினால் கிடைக்கும் பலன்கள்!

nathan

உங்களது குழந்தையின் தோல் நிறத்தை சிவப்பாக மாற்றுவதற்கு இந்த 10 எளிய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

nathan

இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க நினைத்தால் இதனை அடிக்கடி எடுத்துக்கோங்க…!!!சூப்பரா பலன் தரும்!!

nathan

நவீன சமையல் பாத்திரங்களும் அதன் தீமைகளும்

nathan

ஆண் குழந்தை பிறக்க அட்டவணை – தாய்மார்கள் அதிகம் தேடும் விஷயங்களில் ஒன்று

nathan

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

nathan