தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 150 கிராம்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை ஊர வைக்கவும். பின்னர் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.
மேலும் மற்றொரு வாணலியில் சிறிது தேங்காய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, வறுத்து பின்னர் கடலையை சேர்த்து கிளறி அதில் வதக்கிய இஞ்சி விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இறக்கப் போகும் போது அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இதனை புட்டுடன் சேர்த்து சுவையாக ருசிக்கலாம்