36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் நடிகருமான மோகன் ஷர்மா மீது கொலைவெறி தாக்குதல்!

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும், திரைப்பட நடிகருமான மோகன் சர்மாவை, இருவர் தாக்கினர். இதில் முகம், கால், பாதங்களில் காயம் அடைந்த அவர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக பணியாற்றிய போது, ​​பிரபல நடிகை லட்சுமியை காதலித்து 1975ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து மோகன் சர்மா சாந்தியை 2வது திருமணம் செய்தார். லட்சுமியும் சிவச்சந்திரனை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் ஷர்மா தற்போது பல படங்கள் மற்றும் நாடகத் தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ‘தாலாடு’ சீரியலில் இவர் முக்கிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சென்னை பாய்ஸ் கார்டனில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. தனியார் நிறுவனத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்ட இந்த வீடு, கடந்த ஆண்டு இரு இடைத்தரகர்கள் மூலம் டாக்டர் ராஜா ரமணனுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வைத்தியருக்கு வீடு விற்கப்பட்ட நாள் முதல் இரண்டு முகவர்களும் சட்ட விரோதமாக வீட்டில் நுழைந்து வசித்து வந்தனர். இதுபற்றி நடிகர் மோகன் சர்மா கேட்டதற்கு, இருவரும் அவமரியாதையாக பேசியதால், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மோகன் சர்மாவுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

 

இந்நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி இரவு 7 மணியளவில் மோகன் சர்மா காரில் வெளியே சென்றபோது, ​​இடைத்தரகர் ஒருவர் திடீரென அவரைத் தாக்கினார். இந்த சம்பவத்தில் மோகன் சர்மாவுக்கு மூக்கு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மோகன் சர்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இடைத்தரகர்கள் இருவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

70க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி!

nathan

ஹேக் செய்யப்பட்ட நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுன்ட்..

nathan

விவசாயத்திலும் கலக்கும் நடிகர் கிஷோர்….

nathan

இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? மேலாடையை கழட்டி விட்டு மொத்தமும் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ரேயா..!

nathan

விஜயகாந்த் உடல் எப்போது தகனம்?முக்கிய விவரம்!

nathan

கடலில் முதல் தடவையாக தங்க முட்டை மீட்பு

nathan

பழக மறுத்த நண்பனை கத்-தியால் குத்திய இளைஞன்!!

nathan

செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan