உடல் கொழுப்பு கரைய !!!
முட்டைகோஸ் சூப்:
தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ் – கால் கிலோ
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
தாளித்ததும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் அதனை வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.
மருத்துவக்குணங்கள்:
முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.
உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.
முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.
குறிப்பு:
காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடல் கொழுப்பு கரையும்.
Related posts
Click to comment