26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
paneer pepper fry 1672835077
சமையல் குறிப்புகள்

பன்னீர் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

* மைதா – 3/4 கப்

* சோள மாவு – 3/4 கப்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

சாஸ் செய்வதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்paneer pepper fry 1672835077

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் 3/4 கப் மைதா, 3/4 கப் சோள மாவு, 1/2 டீஸ்பூன், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்தற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின் பன்னீர் துண்டுகளை எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் சீரகம், 1/2 சோம்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் பெப்பர் ப்ரை தயார்.

Related posts

சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன்

nathan

சுவையான மசாலா பாஸ்தா

nathan

இப்படி ஒரு முட்டை ஆம்லெட்டை ருசித்தது உண்டா? ஆஹா பிரமாதம்

nathan

சுவையான பிரட் சாட் ரெசிபி

nathan

சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

nathan

சுவையான கேரட் கூட்டு

nathan

சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

nathan

குறுகிய நேரத்தில் சுவையான பச்சை மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan