30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர் : மாரடைப்பால் மரணம்!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் திலீப் சால்வி வசித்து வருகிறார். அவருக்கு வயது 56, இவரது மனைவி பிரமிளாவுக்கு 51 வயது. திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வேவின் தம்பி ஆவார்.

நேற்று இரவு 10 மணியளவில் திலீப் சால்வே வீடு திரும்பினார். பின்னர் திலீப்புக்கும், அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய திலீப் தனது மனைவி பிரமிளாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே பிரமிளா மயங்கி விழுந்தார். மனைவியை சுட்டுக் கொன்ற சில நிமிடங்களில் திலீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், திலீப்பும் நிலைகுலைந்து விழுந்தார், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவரது மகன், ரத்த வெள்ளத்தில் தாயும், தந்தையும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திலீப் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆட்டோகிராப் பட நடிகையா இது? வெளியான தற்போதைய புகைப்படம்!

nathan

நடிகை நட்சத்திராவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

தோண்ட தோண்ட கிடைத்த எலும்பு துண்டுகள்… கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்!

nathan

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

nathan

“நீயெல்லாம் பொம்பளையாடி..” வனிதா 4வது திருமணம்..

nathan

வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும்,- கமல்ஹாசன்

nathan

ஷாருக்கான், விஜய்யை வைத்து பிரமாண்ட திரைப்படம்

nathan

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிஷோர்

nathan

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்

nathan