32.8 C
Chennai
Thursday, Jul 3, 2025
p44b
எடை குறைய

எடை குறைப்பு சாத்தியம்

‘கணிசமான அளவு எடையைக் குறைத்துவிடலாம்’ என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாக விதைக்கவேண்டும். ‘என்னால் முடியுமா?’ என்ற கேள்வியோடு வருபவர்களுக்கு, முடியும் என்ற நம்பிக்கையை வரவழைப்பதுதான் மிகவும் முக்கியம். தினமும் என்ன சாப்பிடுகிறோமோ, அதை சாப்பிட்டுக்கொண்டே எடையைக் குறைக்கலாம். அதுதான் சாத்தியம்கூட. எடையைக் குறைக்க காலை உணவு அவசியம். ஆனால், இரவு உணவு எளிமையாக இருக்க வேண்டும். பெரிய நெல்லிக்காய், சுக்கு, தனியா, குடமிளகாய், புரோகோலி, பாலக், கோஸ், வெங்காயம், பூண்டு, செலரி போன்றவை, கொழுப்பைக் குறைக்க உதவும். அடர் நிறங்கள் கொண்ட, வெவ்வேறு நிறக் காய்கள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை (ஜீனி), மைதா, சாஃப்ட் டிரிங்க்ஸ், பேக்கரி தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். அல்லது அறவே ஒதுக்க வேண்டும்.

நான் தந்துள்ள ‘ஐடியல் டயட் சார்ட்’ முறையில் சாப்பிடுங்கள் (இது பொதுவானது. அவரவர் விருப்பம் மற்றும் உடல்நிலைக்கேற்ப இது மாறும்). மாதத்துக்கு 4 கிலோ எடையை கண்டிப்பாகக் குறைக்கலாம். கூடவே, வெந்தயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்க்கரை அளவு குறையும். கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்கு வரும். நல்ல கொழுப்பின் (HDL) அளவு கூடி, கெட்ட கொழுப்பின் (HDL) அளவு குறையும்.

சரியான விகிதத்தில், சரியான உணவு முறை, முறையான உடற்பயிற்சி. எல்லாவற்றையும்விட மேலாக, ஸ்ட்ரெஸ்’ இல்லாத வாழ்க்கைமுறை இருந்தால் போதும். எளிதில் குறைக்கலாம் எடை!
ஐடியல் டயட் சார்ட்!

காலை எழுந்ததும், காபி, டீ அருந்துவதற்கு பதிலாக, ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு. அடுத்ததாக சிறிது கிரீன் டீ. தேவைப்பட்டால் சர்க்கரை சேர்க்காத காபி / டீ.
காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது கீரை / காய் ஸ்டஃப் செய்த தோசை. தொட்டுக்கொள்ள வெங்காயச் சட்னி, கொத்தமல்லி சட்னி (தாளிக்காமல்) அல்லது சாம்பார். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், வேக வைத்த முட்டையின் வெள்ளைக் கரு. (குறிப்பு: கோதுமை மாவு அரைக்கும்போது, ஒரு கிலோ கோதுமைக்கு 100 கிராம் சோயா சேர்த்து அரைப்பது நல்லது.)

முற்பகலில், வெண்ணெய் எடுத்த மோர் ஒரு கிளாஸ் அல்லது சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸ் அல்லது இளநீர் அல்லது காய்கறி சூப் ஒரு பவுல்.

மதிய உணவுக்கு, அவரவர் கை அளவுக்கு நான்கு கைப்பிடி அளவு சாதம். பூசணி, பீர்க்கை, புடலை, சுரைக்காய், காலிஃப்ளவர் ஏதாவது காய்கறி கூட்டு. ஏதேனும் ஒரு கீரை.

பிற்பகலில் லோ கிளைசமிக் இண்டெக்ஸ்’ கொண்ட சோயா, ராஜ்மா, சிறிய கறுப்பு கொண்டைக்கடலை இவற்றில் ஏதாவது ஒரு சுண்டல் 2 கைப்பிடி அல்லது வறுத்த சோயாபீன்ஸ் 2 கைப்பிடி. இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கு முன், காளான், காய்கறி அல்லது தக்காளி சூப் 2 பவுல். ஒரு மணி நேரம் கழித்து, பப்பாளி, ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழம். அதனுடன், காய்கறிகள் சேர்த்த சாலட் ஒரு பவுல்.

உடற்பயிற்சி:
தினமும் 25 நிமிடம் யோகப்பயிற்சி, கூடவே மூச்சுப்பயிற்சியும் முக்கியம். அதுமட்டுமின்றி, பொதுவாக எப்போதுமே நிற்கும்போதும், நடக்கும்போதும் பேசும்போதும் வயிற்றை உள்ளிழுத்தபடியே இருந்து பழகவேண்டும். அதுவே ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதனால் வயிற்றுத் தசைகள் டோன்’ ஆகி, தொப்பை குறையும்.
p44b

Related posts

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாததற்கான காரணங்கள்

nathan

எடை இழக்க சிறந்த 9 பயனுள்ள வழிகள்

nathan

உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல்பருமன் குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ், சீரக டீ, திரிபலா பொடி!

nathan

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan

வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?

nathan

தினமும்‬ இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்

nathan

அம்மாக்கள் எடை குறைக்க…

nathan