Other News

சுவையான அன்னாசி ரசம்

தேவையான பொருட்கள்:

* அன்னாசி – 2 துண்டுகள்

* பெரிய தக்காளி – 1

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* வேக வைத்த துவரம் பருப்பு – 1/3 கப்

* தண்ணீர் – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 3/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் 1 துண்டு அன்னாசியைப் போட்டு அரைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் 1/2 தக்காளியை கையால் பிசைந்து, அதில் 3/4 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அத்துடன் அன்னாசி சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

* அதன் பின் அரைத்த மிளகு கலவையை சேர்த்து 5-7 நிமிடம் பச்சை வாசனை போக மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

Pineapple Rasam Recipe In Tamil
* அதற்குள் மீதமுள்ள ஒரு துண்டு அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டவும். அதேப் போல் மீதமுள்ள பாதி தக்காளியையும் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் அன்னாசி துண்டுகள் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, கொதிக்கும் ரசத்தில் ஊற்றி, தேவையான அளவு நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து துவரம் பருப்பை நன்கு மென்மையாக வேக வைத்து மசித்து, ரசத்துடன் சேர்த்து ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அன்னாசி ரசம் தயார்.

Related posts

BARBIE உடையில் CUTE-ஆக சென்று அசத்திய நடிகை சித்தி இத்னானி

nathan

பல சிக்கல்களை சந்திக்கும் ராசிகள் -செவ்வாய் பகவான் தரப்போகும் பிரச்சனை

nathan

மனித மூளையில் ‘சிப்’ ; எலான் மஸ்கின் ‘நியூரோலிங்க்’

nathan

பிரமாண்டமாக நடந்து முடிந்த அசோக் செல்வன் -கீர்த்தி பாண்டியன் திருமணம்

nathan

சுவையான… பட்டாணி குருமா

nathan

நடிகை -மாடல் அழகிகளை வைத்து விபசாரம்

nathan

விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள்

nathan

4 ஆண்டில் 10 கோடி டர்ன்ஓவர்: சக்கை போடு போடும் அம்மா-மகள் ஆடை பிராண்ட்!

nathan

மேஷம், கடகம், கன்னி ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

nathan