24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 veg pulao 1669916749
சமையல் குறிப்புகள்

சுவையான வெஜ் புலாவ்

தேவையான பொருட்கள்:

* பாசுமதி அரிசி – 1 1/2 கப்

காய்கறிகள்…

* காலிஃப்ளவர் – 1/2 கப்

* நறுக்கிய உருளைக்கிழங்கு – 1/2 கப்

* நறுக்கிய கேரட் – 1/4 கப்

* பச்சை பட்டாணி – 1/4 கப்

* குடைமிளகாய் – 1/4 கப்

பிற பொருட்கள்:

* நெய் – 3 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச்

* பூண்டு பல் – 4-5

* பச்சை மிளகாய் – 1-2

* நறுக்கிய கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன்

* புதினா இலைகள் – 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்

* தண்ணீர் – 2 1/2 – 3 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* கிராம்பு – 4

* ஏலக்காய் – 3-4

* பட்டை – 1 இன்ச்

* அன்னாசிப்பூ – 1 துண்டு1 veg pulao 1669916749

செய்முறை:

* முதலில் பாசுமதி அரிசியை நீரில் ஒருமுறை அலச வேண்டும். பின் கழுவிய அரிசியில் நீரை ஊற்றி 20-30 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் அரிசியைக் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கெட்டியான மற்றும் அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

Veg Pulao Recipe In Tamil
* அடுத்து அதில் அரைத்த இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுதை சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரிசியைப் போடு 1-2 நிமிடம் வதக்கிய பின், நீரை ஊற்றி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறிவிட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, காற்றுப்புகாதவாறு மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, நீர் வற்றும் வரை அரிசியை வேக வைக்க வேண்டும்.

* சாதம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடம் கழித்து கிளறி விட வேண்டும். இப்போது சுவையான வெஜ் புலாவ் தயார்.

Related posts

பெண்களுக்கான சமையல் குறிப்புக்கள்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு குடைமிளகாய் வறுவல்

nathan

வறுத்து அரைச்ச சாம்பார்

nathan

சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan

சன்னா பட்டர் மசாலா

nathan

முட்டை சேமியா உப்புமா ரெசிபி

nathan

என் சமையலறையில்!

nathan

அசத்தலாக சிக்கன் பெப்பர் கிரேவி! வெறும் 10 நிமிடத்தில்

nathan

சுவையான மீல் மேக்கர் குருமா

nathan