Other News

சுவையான ரெட் சாஸ் பாஸ்தா

2 red sauce pasta 1669111609

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 1 கப்

* தண்ணீர் – 4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (அரைத்தது)

* சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்

* மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* சீஸ் – அலங்கரிக்க தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து பாஸ்தாவை வேக வைக்க வேண்டும்.

* பாஸ்தா நன்கு வெந்ததும், 3/4 கப் பாஸ்தா வேக வைத்த நீரை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, எஞ்சிய நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

Red Sauce Pasta Recipe In Tamil
* பிறகு அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, பச்சை வாசனை போக குறைந்தது 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் சில்லி ப்ளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப், மிளகுத் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

* பின் அதில் எடுத்து வைத்துள்ள பாஸ்தா நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக அதன் மேல் துருவிய சீஸைத் தூவினால், சுவையான ரெட் சாஸ் பாஸ்தா தயார்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பனங்கிழங்குவுடன் மிளகை உட்கொண்டால் ஏற்படும் அதிசயம் என்ன?

nathan

பிரியங்காவை சோகத்தில் ஆழ்த்திய மரணம்… அந்த நெருக்கமானவர் யார்?

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan

கிரிக்கெட் உலகை அன்றே கணித்த அஜித்!

nathan

நீச்சல் உடையில் ஜோதிகா.. பலரும் பார்த்திடாத பதின்ம வயது போட்டோஸ்..!

nathan

கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

nathan

ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா தம்பதி: குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளனர் தெரியுமா?

nathan

சென்னையில் பிரமாண்ட தீம் பார்க் – எங்கே தெரியுமா?

nathan

ஜோதிட சாஸ்திரத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சோம்பேறிகளாம்

nathan