28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
p38
ஆரோக்கிய உணவு

அம்மா ரெசிப்பி; பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை!

‘உடல் பருமனைக் குறைக்கிற சக்தி பப்பாளிக்கு உண்டு’னு, வீட்டிலேயே பப்பாளி மரத்தை வளர்த்தாங்க என் அம்மா. பப்பாளியில் வெரைட்டியான டிஃபன் செய்வாங்க. பப்பாளிக் காயோடு, கம்பு மாவு சேர்த்து அம்மா செய்யுற அடை அவ்ளோ ருசியா இருக்கும். சத்தும் அதிகம்!” – என்கிற திருவான்மியூரைச் சேர்ந்த சுகந்தி முரளி, பப்பாளி அடை ரெசிப்பியைப் பகிர்ந்துகொள்கிறார்.

தேவையானவை: பப்பாளிக்காய் துருவல், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், கம்பு மாவு – 2 கப், தினை குருணை, அரிசிமாவு – தலா கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு ஸ்பூன், உப்பு, நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

அரைப்பதற்கு: துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறுதுண்டு, பட்டை, கிராம்பு – தலா – 2, சர்க்கரை, சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சாமான்களையும் கலந்து, தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைக்கவும்.

தோசைக் கல்லைக் காயவைத்து மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும். குழந்தைகள் விரும்பினால், அடை வேகும்போது, சிறிது சீஸ் சேர்த்துக் கொடுக்கலாம். தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ராஜேஷ், சித்த மருத்துவர், திருநெல்வேலி: பப்பாளியில் வைட்டமின் டி அதிகம். இதனுடன் கம்பும் சேர்ப்பதால், உடலுக்குக் குளிர்ச்சி தரும். பசியைத் தூண்டும். குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்ப்பால் நன்கு சுரக்கும். முளைகட்டிய சுண்டல் புரதத்தில் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள் சாப்பிடலாம். கொழுப்பைக் குறைத்து உடலை வலுவாக்கும்.
p38

Related posts

மருத்துவ குணம்மிக்க பப்பாளி – தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

nathan

கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!!

nathan

தெரிந்துகொள்வோமா? அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சுவையான வெள்ளரிக்காய் சட்னி

nathan

உங்களுக்கு தெரியுமா தேனை எந்தெந்த ஜூஸில் கலந்து குடிச்சா என்னென்ன நோய்கள் தீரும் தெரியுமா?

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

ஹோம் மேட் மயோனைஸ்

nathan

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan