28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
red gravy
சமையல் குறிப்புகள்

கலர்பொடி சேர்க்காமல் கிரேவியில் நிறத்தை கொண்டு வரமுடியுமா?

ஹோட்டல்களில் கிடைக்கிற மாதிரி சிவப்பு நிறத்தில் கிரேவி செய்ய என்னவெல்லாம் சேர்க்க வேண்டும்? கலர் பொடி சேர்க்காமல் அந்த நிறத்தைக் கொண்டு வர முடியாதா? வீட்டில் செய்கிற போது ஹோட்டல் சுவையும் வருவதில்லையே..? சமையல்கலை நிபுணர் தனுஜா தர்மேந்திரகுமார்

ரெட் கிரேவி என்கிற ஒன்றை தயார் செய்து வைத்துக் கொண்டால் ஹோட்டல் கிரேவி நிறத்திலும் சுவையிலும் நீங்களும் வீட்டில் விதம் விதமாக சமைக்கலாம். இந்த ரெட் கிரேவியை சைவம் மற்றும் அசைவம் எதற்கும் உபயோகிக்கலாம். மொத்தமாகச் செய்து ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

என்னென்ன தேவை?

வெங்காயம் – 1 கிலோ, தக்காளி – 1 கிலோ, இஞ்சி விழுது – 100 கிராம், பூண்டு விழுது – 100 கிராம், உப்பு – 50 கிராம், எண்ணெய் – 250 மி.லி.

மசாலாவுக்கு…

தனியா தூள் – 25 கிராம், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 25 கிராம், மஞ்சள் தூள் – 25 கிராம், வீட்டிலேயே தயாரித்த கரம் மசாலா – 25 கிராம் (சோம்பு, சீரகம், தனியா, கிராம்பு, பட்டை, மிளகு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து அரைத்தது).

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும். இஞ்சி விழுது, பிறகு பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவுக்குக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இன்னும் அடர் சிவப்பு நிறம் வேண்டும் என்றால் சிறிது குங்குமப்பூவை வெந்நீரில் கரைத்துச் சேர்க்கலாம். அரை மணி நேரம் வதக்கி எடுத்து வைக்கவும். இதை எந்த கிரேவிக்கும் அடிப்படையாகச் சேர்த்துச் செய்யலாம்.
red gravy

Related posts

பீன்ஸ் புளிக்குழம்பு

nathan

சுவையான மிளகூட்டல்!…

sangika

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika

சுவையான தக்காளி குருமா

nathan

சுவையான ப்ராக்கோலி சப்ஜி

nathan

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

nathan

டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

சூப்பரான செட்டிநாடு பால் பணியாரம்

nathan

ருசியான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது?…

sangika