29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
p107
ஆரோக்கிய உணவு

முடி வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்!!

பருப்புகள்:பருப்பு வகைகளில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், இரும்புச்சத்து, புரதம் உள்ளன. குறிப்பாக, புரதச்சத்து தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும். முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:இதில் வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் நிறைவாக உள்ளன. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளது. தினமும் உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் சேர்த்துக்கொண்டால், முடி கொட்டுவதைத் தவிர்க்கலாம். இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகிறது. வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவையே.

கேரட்: வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் சிறந்தது. தோல் மற்றும் முடியை இளமையாக மாற்றும் தன்மை இதற்கு உண்டு. சாலட் அல்லது ஜூஸ் போன்று தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது. முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. தினமும் காலை ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பால் பொருட்கள்: குறைந்த கொழுப்புச்சத்துள்ள சீஸ், தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவற்றில் ‘கேஸின்’ (Casein) எனும் ஊட்டச்சத்து உள்ளது. மேலும், புரதச்சத்து நிறைந்தது. இதனால், தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
p107

Related posts

இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க!

nathan

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு,, நம் பாரம்பரிய சத்து மாவு தயாரிப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!!

nathan

பூண்டு பால்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழம் சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்!

nathan

சுவையான ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்

nathan

நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்!

nathan

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

nathan

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ

nathan