24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
drumstickmasala 1626687331
சமையல் குறிப்புகள்

முருங்கைக்காய் மசாலா பிரட்டல்

தேவையான பொருட்கள்:

* முருங்கைக்காய் – 1

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* வறுத்த வேர்க்கடலை- 1/2 கப்

* மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* கிராம்பு – 2

* பட்டை – 1 இன்ச்

* துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 1 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தக்காளியைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாவை வேக வைக்க வேண்டும்.

* பத்து நிமிடம் கழித்து, அதில் முருங்கைக்காயை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* முருங்கைக்காய் நன்கு வெந்ததும், அதில் இருந்து எண்ணெய் வெளிவர ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் தயார்.

Related posts

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika

சுவையான வெஜிடேபிள் கிச்சடி ரெசிபி

nathan

சூப்பரான தேங்காய் பொடி சாதம்

nathan

பச்சை பயறு கடையல்

nathan

முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு

nathan

புதினா தொக்கு

nathan

சுவையான முள்ளங்கி கூட்டு

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

தக்காளி குழம்பு

nathan