தேவையான பொருட்கள்:
* காராமணி – 300 கிராம்
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 2
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காராமணியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் பொடியாக நறுக்கிய காராமணி பீன்ஸ் சேர்த்து, உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, குக்கரில் உள்ள காராமணி மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சில நொடிகள் நன்கு கிளறிவிடுங்கள்.
* பின்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காராமணி பொரியல் தயார்.