29.3 C
Chennai
Tuesday, Nov 19, 2024
methiroti 1654784262
சமையல் குறிப்புகள்

சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 2 கப்

* வெந்தயக் கீரை – 1 கட்டு

* சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய்/நெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெந்தயக் கீரையின் இலைகளை தனியாக எடுத்து, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தயக் கீரை, சாம்பார் பவுடர், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

Venthaiya Keerai Chapathi Recipe In Tamil
* பிறகு பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் சிறிது எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.

குறிப்பு:

உங்களுக்கு வெந்தயக்கீரையின் கசப்புச் சுவை வேண்டாம் என்றால், வெந்தயக் கீரையை 1/2 டீஸ்பூன் எண்ணெயில் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதன் பின் கோதுமை மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.

Related posts

பூரி மசாலா

nathan

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

nathan

கேரளா ஸ்டைல் கடலை கறி

nathan

சுவையான கோவைக்காய் பொரியல்

nathan

சுவையான தட்டைப்பயறு குழம்பு

nathan

சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

nathan

காரசாரமான… சில்லி ராஜ்மா

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

சுவையான சிக்கன் சூப்

nathan