தேவையான பொருட்கள்:
* தோசை மாவு – 1 கப்
* குடைமிளகாய் – 1/4 கப் (நீளமாக கீறியது)
* வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/4 கப்
* பிட்சா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
* சீஸ் – 1/4 கப் (துருவியது)
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் – 1 சிட்டிகை
* ஆரிகனோ – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
Pizza Dosa Recipe In Tamil
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், 2 கரண்டி தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி, அதைப் பரப்பாமல், அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து குறைவான தீயில் சிறிது நேரம் தோசையை வேக வைக்க வேண்டும்.
* பின்பு தோசையின் மேல் 1 டேபிள் ஸ்பூன் பிட்சா சாஸை பரப்பி, அதன் மேல் வெங்காயம், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் தூவி, இறுதியாக துருவிய சீஸை பரப்பி விட்டு ஒரு நிமிடம் மூடி வைத்து, சீஸ் உருக வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அந்த தோசையை அப்படியே ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், ஆரிகனோ தூவினா, பிட்சா தோசை தயார்.