24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
5
ஆரோக்கிய உணவு

விரைவில் கர்ப்பமாக உதவும் மிகச்சிறந்த உணவுகள் :

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடிய உணவுகளின் பட்டியலைத் தான் பார்த்திருப்போம். ஆனால் கர்ப்பமாக முயற்சிக்கும் போதும் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கர்ப்பமாக முடியும்.

இருப்பினும் பெரும்பாலானோருக்கு இந்த உணவுகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கருத்தரிக்க முயலும் போது சாப்பிட வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த உணவுகளை ஓவுலேசன் காலத்தில் சாப்பிட்டு, உடலுறவில் ஈடுபட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, ஆல்கஹால், காப்ஃபைன் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை கருமுட்டை வளர்ச்சியடைவதில் தடையை ஏற்படுத்தும்.

சரி, இப்போது கர்ப்பமாக முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

பீன்ஸ்

பீன்ஸில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரித்து, எளிதில் கர்ப்பமாக வழிவகுக்கும். ஆகவே இந்த உணவுப் பொருளை கர்ப்பமாக முயற்சிக்கும் போது, உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

முழு தானிய உணவுகள்

முழு தானியங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். ஆகவே தினமும் 6 அவுன்ஸ் முழு தானியங்களை உணவில் சேர்த்து வந்தால், அது சீக்கிரம் கர்ப்பமாக உதவியாக இருக்கும்.

மீன்

மீன்களில் சால்மன், கெளுத்தி, இறால் மற்றும் சூரை மீன்கள் போன்றவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால், அது ஆரோக்கியமான சிசுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

கீரைகள்

கீரை வகைகளான பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் ஃபோலேட் வளமாக இருப்பதால், இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கோதுமை பிரட்

கோதுமை பிரட் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும். இதனால் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன்கள் சீராக செயல்பட்டு, எளிதில் கர்ப்பமாக முடியும். எனவே வெள்ளை பிரட்டை தவிர்த்து, கோதுமை பிரட்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கும் மற்றும் உள்காயங்களை குணப்படுத்தும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்க்கும் போது, உடலின் இனப்பெருக்க உறுப்பு ஆரோக்கியமாக இருப்பதோடு, கருவின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.
5

Related posts

குடைமிளகாயில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கவுனி அரிசி உருண்டை

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

உங்களது “மூட்”-ஐ உடனடியாக அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சுவையான பாகற்காய் குழம்பு

nathan

கோடைக்கு ஏற்ற “நுங்கு பானம்”

nathan

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

nathan