29 C
Chennai
Wednesday, Jun 26, 2024
fa623411 20f3 42d8 8f3c 619553728f53 S secvpf
மருத்துவ குறிப்பு

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது.

இதனால் வைரஸ் பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.

தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் வருவதால், அடிக்கடி நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.

தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்சனையை தவிர்க்க முடியும்.

தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது.

இதனால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும். எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சரியான தூக்கம் அவசியம்.

இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

நீர்கோர்க்காமல் இருக்க சூப்பர் வழிகள் :

* தலையை காய வைத்ததும் நீர்கோர்த்து கொண்டிருந்தால் கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு வேது (ஆவி) பிடிக்கலாம்.

* கொதிக்கும் நீரில் செங்கல் போட்டு, அந்த ஆவியை நன்கு முகர்ந்து உள்ளிழுக்கலாம் அல்லது நீட்டு மஞ்சள் தீயில் காண்பித்து முகரலாம்.

– இவ்வாறு மாதம் மூன்று முறை செய்துவர தலையில் நீர் கோர்க்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதுபோன்ற வேளைகளில் காபி, இஞ்சி டீ, சூப் போன்ற சூடான பானங்களை குடிப்பது மிகவும் நல்லது.
fa623411 20f3 42d8 8f3c 619553728f53 S secvpf

Related posts

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றின் கொழுப்பை குறைக்க உதவும் சில வியக்கத்தக்க வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்.. தீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்!!

nathan

உங்கள் வயிற்றில் குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் பையில் இருக்க வேண்டிய 12 பொருட்கள்!!!

nathan

பொறாமை என்ற தீய குணத்தை அழிப்போம்

nathan

உங்களுக்கு தெரியுமா பெற்றோர்களின் சண்டை குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் தெரியுமா?

nathan

செரிமானக் கோளாறைப் போக்கும் பிரண்டை

nathan