என்னென்ன தேவை?
காய்ந்த பட்டாணி – 1 கப்,
கேரட் – 1,
வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை – 1/2,
கிராம்பு – 1,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காய்ந்த பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் ப்ரஷர் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வதக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் வேக வைத்த பட்டாணி, வதக்கிய கேரட், வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். இக்கலவையை வடிகட்டி ஒரு கடாயில் போடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பரிமாறும் முன் சிறிது வெண்ணெய் சேர்த்து சூடாக சாப்பிடவும்.