sl1231
சிற்றுண்டி வகைகள்

மைதா சீடை

என்னென்ன தேவை?

மைதா – 1 கப்,
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் – 3 டீஸ்பூன்,
எள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
தண்ணீர் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி!!!sl1231

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டா

nathan

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

nathan

ஃபுரூட் கேக்

nathan

அச்சு முறுக்கு

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

வடகறி–சமையல் குறிப்புகள்!

nathan

சில்லி கொத்து சப்பாத்தி

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan