26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 1458108805 6 cucumberfacemaskbenefits
சரும பராமரிப்பு

சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்!

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயிலில் செல்லவே பலருக்கும் பயமாக இருக்கிறது. ஏனெனில் அந்த அளவில் வெயில் கொளுத்துகிறது. மேலும் வெயிலில் செல்லும் போதும் சரி, வீட்டிற்கு வந்ததும் சரி, சருமம் எரிய ஆரம்பிக்கும்.

அதுமட்டுமின்றி, யாரே நம் மீது பெயிண்ட்டை ஊற்றியது போல் நம் நிறமும் மாறியிருப்போம். இவற்றைத் தவிர்க்கவும், சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது.

இங்கு கொளுத்தும் வெயிலில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாம்பழ ஃபேஸ் பேக்

கோடையில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாம்பழத்தின் கூழ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கோல்ட் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களுக்கு தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் கோடையில் சருமத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்கலாம்.

தர்பூசணி ஃபேஸ் பேக்

கோடையில் தர்பூசணியை வாங்கிச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். உங்கள் வீட்டில் தர்பூசணி இருந்தால், 1/2 கப் தர்பூசணி கூழ் உடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை ஃபேஸ் பேக்

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தினமும் தடவி வந்தால், வெயிலால் ஏற்பட்ட கருமையைப் போக்கலாம்.

கிவி ஃபேஸ் பேக்

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தின் தரத்தை மேம்படுத்தும். ஒரு பௌலில் 1/2 கப் கிவி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பால், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது.

தயிர் ஃபேஸ் பேக்

தயிர் சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அத்தகைய தயிரை கோடையில் வாரத்திற்கு இரண்டு முறை கை, கால், முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவினால், சருமத்துளைகள் சுத்தமாகி, சரும பொலிவு மேம்படும்.

வெள்ளரிக்காய் ஃபேஸ்

பேக் வெள்ளரிக்காயும் கோடையில் அதிகம் கிடைக்கும். அத்தகைய வெள்ளரிக்காயை ஒன்று வாங்கி அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த பால் கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சிப் பெறும்.

அன்னாசி ஃபேஸ் பேக்

ஒரு அன்னாசி பழத் துண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும் ரோஸ் வாட்டர் கொண்டு துடைத்து, பின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும எரிச்சல் தடுக்கப்படும்.

16 1458108805 6 cucumberfacemaskbenefits

Related posts

அக்குளை ஷேவ் செய்த பின் ரொம்ப அரிக்குதா? இதோ அதைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

கோடைக்கேற்ற கற்றாழை அழகுக் குறிப்புகள்!

nathan

வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்

nathan

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

nathan

சருமத்தை ஜொலிக்க வைக்கும் குளியல் பொடி

nathan

தேமலைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

சோர்ந்து காணப்படும் சருமத்தை பளிச்சென்று மாற்ற சில வழிகள்

nathan

முகம் மென்மையாக மாற

nathan

‘இந்த’ ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்…!

nathan