1 . ஆக்கிராண மெழுகு
வெள்ளைப் பூண்டு
தும்பைப் பூ
குங்குமப்பூ
சவுரிப்பழம்
ஆதொண்டைப் பழம்
கஸ்தூரி மஞ்சள்
வேப்பம் பட்டை
இலிங்கம்
நொச்சி இலை
இவற்றைச் சம எடையாக கல்வத்தில் போட்டு வேப்ப எண்ணெய் விட்டு நன்றாக அரைத்து மெழுகு பதத்தில் வாயகன்ற குப்பியில் இடவும்.
வேண்டிய சமயத்தில் கடலைப் பிரமாணம் மெழுகைச் சீலையில் தடவித் திரிபோல்
சுருட்டித் தீப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை முகரவும்.
தீரும் நோய்கள்:
தலைப்பாரம்
தலையிடி
தலை நோய் முதலியன குணமாகும்.
பத்தியம்: பால் அன்னம் மட்டுமே ஆகும்.
2 . உறங்கு வாதத்திற்கு புகை
புன்னை நெய்யில்
வெள்ளுள்ளி, மிளகு, வேப்பம் வித்து, மஞ்சள் ஆகியவைகளைச் சேர்த்து அரைத்துப்
பதத்தில் வழித்துச் சீலையில் தடவித் திரியாக்கிக் கொளுத்திப் புகை
பிடிக்கச் சன்னி, தலைபாரம் நீங்கும்.