28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
26 1435305648 2sevenreasonsyourbreastshurt
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்பட இதெல்லாம் கூட காரணமாக இருக்கின்றன!!!

பொதுவாகவே உங்கள் வீட்டில் அல்லது உடன் பணிபுரியும் பெண்கள் சிலர்,” என்னன்னே தெரியல நெஞ்சு வலிக்குது..” என குண்டை தூக்கிப் போடுவார்கள். கவலை வேண்டாம், மாரடைப்பு அல்லது இதய நோய்கள் இல்லாவிட்டாலும் கூட, சில காரணங்களால் பெண்களுக்கு நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த காரணங்கள் எல்லாம் அவர்களது அன்றாட வாழ்வில், அவர்கள் செய்யும் வேலைகள் மற்றும் சிறு சிறு கவனக் குறைவுகளினால் ஏற்படுபவை தான். எனவே, பெரிதாய் அச்சம் கொள்ள வேண்டாம் எனிலும், இந்த காரணங்களை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக்கொள்வது அவசியம்.

மாதவிடாய்

பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது அவர்களது மாதவிடாய் தான். மாதவிடாய் நாளுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளினாலும் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

பொருத்தமற்ற உள்ளாடை

பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ஒன்று, அவர்கள் உடுத்தும் பொருத்தமற்ற பிரா’க்களின் காரணமாகவும் மார்பக வலி ஏற்படுகிறது என்பது. இறுக்கமாக அல்லது சிறிய கப் உடைய பிராவை நாள் முழுக்க அணிவதால் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

வியர்வை வராமல் இருப்பது

சரியாக வியர்வை வெளிவராமல் இருந்தால் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும் என கூறப்படுகிறது. பொதுவாக குளிர் காலத்தில் அதிகமாக வியர்வை வராது, ஆனால், வெயில் காலத்தில் கூட உங்களுக்கு சரியாக வியர்வை வராவிடில், நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

பெரிய மார்பகங்கள்

சிலருக்கு அவர்களது உடலோடு ஒப்பிடும் போது, அளவுக்கு அதிகமாக பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும். இதுவும் கூட மார்பக வலி ஏற்பட காரணமாக இருக்கிறது.

காப்ஃபைன் வகைகள்

காபி அல்லது டீ அதிகமாக குடிப்பதன் காரணங்களினால் மார்பக வலி வர வாய்ப்புகள் இல்லை. ஆனால், சில வகை கப்பூசீனோ, எஸ்பிரெசோவில் இருக்கும் காப்ஃபைன் வகைகளின் காரணங்களால் பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதிகமான உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும் பெண்கள், திடீரென அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மார்பக வலி ஏற்படுவது சாதாரணம். எனவே, பயிற்சியாளரின் ஆலோசனையின் படி பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

விளையாட்டில் ஈடுபடும் பெண்கள்

மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவெனில், விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், அதற்கான பிரத்தியோக உள்ளாடைகள் அணிந்து பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதற்காகவே ஸ்போர்ட்ஸ் பிரா என தனியாக விற்கப்படுகிறது. ஏனெனில், பயிற்சியில் ஈடுபடும் போது, ஃபிட்டாக இன்றி அதிகமாக மார்பகங்கள் அசையும் காரணங்களால் கூட வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

26 1435305648 2sevenreasonsyourbreastshurt

Related posts

இடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்

nathan

பெண்களே கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்க இதை மறக்காதீங்க…

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?

nathan

மூட்டுவலியால் ரொம்ப அவதிப்படுறீங்களா?

nathan

கம்ப்யூட்டரைப் பார்த்து கண்கள் களைப்படைவதை குறைக்க சிறந்த வழிகள்!!!

nathan

நுரையீரல் புற்றுநோய். எளிதாக அறியலாம் அறிகுறிகள்இவைதான்!!

nathan

உதிரப் போக்கின் போது வயிற்று வலியை தவிர்ப்பது எப்படி?

nathan

மரிக்கொழுந்து பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் ..!

nathan