என்னென்ன தேவை?
அரிசி – 1/2 படி,
முட்டை – 3,
சர்க்கரை – 300 கிராம்,
நெய் – 100 கிராம்,
பெருஞ்சீரகத் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தவும். உலர்ந்ததும் முக்கால் பதமாக கொரகொரப்பாக திரிக்கவும். அரிசி மாவில், பெருஞ்சீரகத் தூளைச் சேர்த்து நெய்யை சூடுபடுத்தி ஊற்றவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து, அதில் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து மாவில் கலந்து நன்கு பிசைந்து உளுந்து வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.