28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
fat belly1
தொப்பை குறைய

தொப்ப உங்கள ரொம்போ டிஸ்டேர்ப் பண்ணுதா? 3 நாள் இத ஃபாலோ பண்ணுக..அப்ரோ பாருங்க!

அழகை கெடுக்கும் விசயங்களுள் தொப்பையும் ஒன்று. தொப்பை சாப்பிடுவதனால் மட்டும் வருவதில்லை. போதிய அளவு உடற்பயிற்சி இல்லாமல் இருந்தாலும், உடலில் வேறு விதமான பிரச்சனைகள் இருந்தாலும் கூட தொப்பை வர வாய்ப்பு உள்ளது.
உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான உணவுகள்
அளவுக்கு மீறிய பணம் தலையிலும், அளவுக்கு மீறிய உணவு வயிற்றிலும் சேர்ந்தால் கனத்தை அதிகரித்துவிடும். உட்கார்ந்த இடத்திலேயே வளர்ந்த தொப்பையை, உட்கார்ந்த இடத்திலேயே கரைக்க உதவும் பயிற்சி தான் இந்த மூச்சு பயிற்சி.
மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய.
பயிற்சி -1 : உதரவிதானம்
உதரவிதானம், வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச்சவ்வு, இது நுரையீரல் சுருங்கி விரியக்காரணமாய் இருக்கும்.இது மூச்சு இழுத்துவிட உதவும் தசை .
நுரையீரல் நிரம்ப, இழுத்து மூச்சு விட வேண்டும். இவ்வாறு இழுத்து மூச்சு விடுவது, வயிற்றுப்பகுதியில் இருக்கும் சதையை குறைக்க இது உதவுகிறது. மூச்சை இழுத்து சுவாசிக்கும் போது, உதரவிதானம் பகுதியை பயன்படுத்த வேண்டும்.
செய்யும் முறை
முதலில் கால்களை நீட்டி படுக்க வேண்டும். பிறகு மூச்சை நன்கு இழுத்துவிடும் போது, மார்பு மற்றும் வயிறு பகுதியை நன்கு உணர்தல் வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரவும். இந்த பயிற்சியினால் செரிமானப்பிரச்சனைக்கும் தீர்வுக்காண முடியும்.
பயிற்சி -2 :ஆழமான மூச்சு
ஆழமாக மூச்சை இழுத்துவிடுதல், தொப்பையை குறைக்க உதவுகிறது. இது, யோகாவின் ஓர் பயிற்சியான பிராணயாமாவின் ஓர் அங்கமாகும். ஓர் நாளுக்கு 15-20 முறை இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இந்த பயிற்சியினால் உடலுக்கு தூய்மையான காற்று நிறைய கிடைக்கப்பெரும். இது, உடலில் தேங்கியிருக்கும் கலோரிகளை கரைக்க பெரும் வகையில் உதவுகிறது.
செய்யும் முறை
இந்த பயிற்சியை செய்ய, முதலில் நேராக அமர்தல் வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, உள்ளங்கைகளை தொடை மீது வைத்துக்கொள்ளவும்.
எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, மூச்சின் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முதல் நான்கு நிமிடங்கள் சாதாரணமாக மூச்சு விட வேண்டும். பிறகு ஒன்றில் இருந்து நான்கு என்னும் வரை மூச்சை இழுத்துவிட வேண்டும். அதன் பிறகு, ஒன்றில் இருந்து ஆறு என்னும் வரை மூச்சை இழுத்துவிட வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
பயிற்சி -3 :ஷைனிங் ஸ்கல் ப்ரீத்திங்
தொப்பையை குறைக்க ஓர் சிறந்த பயிற்சி இதுவாகும் மற்றும் தசை பகுதிகளை வலிமையாக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. மற்றும் இந்த பயற்சி சுவாச கோளாறுகளுக்கும் நல்ல தீர்வளிக்கும்.
செய்யும் முறை
முதலில் நல்ல சௌகரியமாக உட்கார்ந்துக்கொள்ளவும். மூச்சை நன்கு உள்ளே இழுக்கவும். வயிறு பகுதியின் தசையை மூச்சினால் பிடித்து வைத்து மூச்சை விடவும். இவ்வாறு 30 வினாடிகள் செய்ய வேண்டும். மீண்டும் 3 நொடிகள் சாதாரணமாக சுவாசித்து விட்டு, மீண்டும் 30 நொடிகள் முன்பு செய்தவாறு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
பயிற்சி -4 :தூண்டும் சுவாசப் பயிற்சி
இந்த பயிற்சி உணர்வுகளை தூண்ட உதவும் பயிற்சியாகும். இது நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க உதவும். உடல் வலிமையை அதிகரிக்கும். தொப்பையை கரைக்க உதவும் மற்றுமொரு சிறந்த பயிற்சியாக இது கருதப்படுகிறது.
செய்யும் முறை
நாற்காலியில் நேராக உட்காரவும். வாயை மூடிக்கொண்டு ரிலாக்ஸ் செய்யவும். மூச்சு விடும் போது அதன் எண்ணிக்கையை எண்ண வேண்டியது அவசியம். இந்த பயிற்சி செய்யும் போது, வயிறு, மார்பு, நுரையீரல் பகுதிக்கு அழுத்தம் தரப்படுகிறது. தினமும், 15 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் காண இயலும்.
பயிற்சி -5 :தொப்பை
இது தொப்பையை குறைக்க உதவும் ஓர் சிறந்த யோகா பயிற்சியாகும். இந்த பயிற்சியின் மூலமாக உடல் வலிமையையும், சக்தியையும் அதிகரிக்க முடியும். இந்த பயிற்சி பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது
செய்யும் முறை
தரையில் அல்லது நாற்காலியில் அமரலாம், நேராக நின்றுக்கொண்டும் இந்த பயிற்சியை செய்யலாம். முதலில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். ஓர் கையை வயிற்றில் வைத்துக்கொள்ளவும். கட்டைவிரல் தொப்புளில் வைத்தவாறு இருக்க வேண்டும். மூச்சை நன்கு இழுத்துவிடும் போது, மார்பு மேலோங்க கூடாது. இதற்கு மாறாக வயிறு நன்கு அகலமாக வேண்டும்.
பயிற்சி -6 :வாய் மூலம் மூச்சுவிடுதல்
வயிறு பகுதியில் அழுத்தம் ஏற்படுத்தி கொழுப்பை குறைக்க இந்த பயிற்சி உதவுகிறது. இது உடலை இலகுவாக உணர வைக்க உதவும்.
செய்யும் முறை
வாயை திறந்து மூச்சுவிடவும். சீராக, மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து விட வேண்டும். அமைதியாக பத்து வரை எண்ண வேண்டும். மூச்சை இழுத்துவிடும் நேர இடைவேளை அதிகமாக இருக்க வேண்டும்.
மூச்சை உள்ளே இழுக்க இரண்டு நொடிகள் என்றால், வெளிவிட நான்கு நொடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக நேர இடைவேளை எடுக்கிறேன் என கஷ்டப்பட வேண்டாம். ஓர் நாளுக்கு மூன்று முறை இந்த பயிற்சியில் ஈடுபட்டால் போதும்.
நான்கு நொடிகள் வரை மூச்சை இழுத்துவிட சிரமமாக இருந்தால், நொடிகளை குறைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த பயிற்சியை உட்கார்ந்து செய்ய முயற்சிக்கவும்.
fat belly1

Related posts

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

nathan

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!

nathan

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

தொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா? இந்த 7 ஜூஸ் குடிங்க!!!

nathan

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்க தேங்காய் எண்ணெய் போதும்! தினமும் மூன்று தேக்கரண்டி இப்படி குடிங்க..?

nathan

சில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த வழி!…

sangika

தொப்பை அதிகரிக்க போகின்றது முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்!!

nathan

பெரிய தொப்பையும் ஒரே இரவில் குறைக்க சூப்பர் டிப்ஸ்?

nathan