25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
aeff50fc 717b 4817 bb81 13f1c3cf2695 S secvpf
சிற்றுண்டி வகைகள்

பிரட் முட்டை உப்புமா

தேவையான பொருட்கள்:

பிரட் – 3 துண்டுகள்
முட்டை – 2
பெரிய வெங்காயம் – 1
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத் தூள் – சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான பிரட் முட்டை உப்புமா ரெடி!!!aeff50fc 717b 4817 bb81 13f1c3cf2695 S secvpf

Related posts

பன்னீர் போண்டா

nathan

சீஸ் ரோல்

nathan

கோதுமை பணியாரம் / வாய்ப்பன்

nathan

மிரியாலு பப்பு

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

கோதுமை ரவை பாயசம்

nathan

டோஃபு கட்லெட்

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan