23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

imagesஇனிய இலவசம்

சூரியன் உதிக்கையில் துயில் கலைந்து ஏர் கலப்பையுடன் கழனிக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரிந்து விட்டு, இருள் கமழ்ந்த மாலையில் வீடு திரும்பும் இந்த நவீன யுகத்தில் சூரியனுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பே அற்றுப்போய் விட்டது. சூரிய ஒளி பட்டாலே கருப்பாகி விடுவோம் என்று முகத்தைப் போர்த்திக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது!

மனித உடலைக் கட்டமைக்கும் கம்பிகளாக விளங்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் டி அத்தியாவசியம். இந்த வைட்டமினின் 90 சதவிகித அளவு சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனை களைவதற்கான ஆலோசனைகளையும் பொது மருத்துவர் வினோத் பிரேம் ஆனந்திடம் கேட்டோம்.‘‘பி, சி போன்ற வைட்டமின்கள் பற்றி அறிந்த அளவு டி வைட்டமின் குறித்து பலருக்கும் தெரியாது. வைட்டமின் டிக்கு ‘சன்ஷைன் வைட்டமின்’ என்கிற பெயரும் இருக்கிறது.

ஏனெனில், சூரிய ஒளி இதற்கு மிகமிக அவசியம். மனித உடலுக்கு நாளொன்றுக்கு 400-600 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இது குறைபடும்போது எலும்பு வலுவிழந்து ஆஸ்டியோ பொரோசிஸ், ஆஸ்டியோமலாசியா ஆகிய பிரச்னைகள் ஏற்படு கின்றன. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் களுக்கு வைட்டமின் டி மிக மிக அவசியம்.  மற்ற வைட்டமின்களை போல வைட்டமின் டிக்கு மாத்திரைகள் எதுவும் தேவையில்லை. சூரிய ஒளியை உள்வாங்குதல் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.

சூரிய வெளிச்சமே படாத குளிர்பிரதேச மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு பெருமளவில் இருக்கும். இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் நம்மால் இயன்ற வரையிலும் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதற்காக உச்சி வெயிலில் நிற்கும் அவசியமெல்லாம் இல்லை. அலுவலகமோ, வீடோ – சூரிய ஒளி உட்புகும் அளவு சூழலை உருவக்கினாலே போதும். வாகனம் ஓட்டிச் செல்லும்போது கைக்கு உறையணிந்து, முகத்தையும் முழுதாக போர்த்திக் கொண்டு செல்வதால் சூரிய ஒளி கிடைப்பது தடைபடும். சில சமூகத்தினர் உடல் முழுக்க மூடும் கருப்பு உடை அணிந்து செல்வதால், தேவையான அளவு சூரிய ஒளி கிடைக்காமல் போகும்.

சூரியன் உதிக்கும் நேரத்திலோ, சூரியன் மறைவதற்கு முன்போ நடைப்பயிற்சி மேற்கொள்வது வைட்டமின் டியை பெற வசதியாக இருக்கும்’’ என்கிற டாக்டர், வைட்டமின் டி லேப் ரிப்போர்ட் குறித்தும் கூறுகிறார்.‘‘உலகிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எலும்பு மிகவும் வலிமையானது. ஆனால், லேப் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர்களில் பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? வைட்டமின் டி யின் ஒரு பிரிவான Free Bio Available Vitamin D தான் எலும்புக்கான வலிமையைக் கொடுக்கக் கூடியது.

இதன் அளவு 0.03க்கும் குறைவாக இருந்தால்தான் வைட்டமின் டி குறைபாடு என்றாகி விடும். இத்தனை ஆண்டுகளாக உலகளவில் அனைத்து நாடுகளிலும் வைட்டமின் டி குறித்த ரத்தப் பரிசோதனையில் 85 சதவிகிதம் Attached With Vitamin D Protein, 15 சதவிகிதம் Attached With Vitamin D Albumin என்று இந்த அளவுகளுக்கு குறைவாக இருத்தலே வைட்டமின் டி குறைபாடாக கணக்கிடப்பட்டு வருகிறது. இது தவறு என்பது குறித்து உலக மருத்துவக் கருத்தரங்குகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதனால், லேப் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக கணக்கிடக் கூடாது. எலும்பு வலிமையை சோதித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்’’ என்கிறார்.

வைட்டமின் டி சத்து கிடைக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம் என உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் கேட்டோம்.‘‘கடல் உணவுகளில் Herring, Salmon ஆகிய மீன்களை தினமும் 90 முதல் 95 கிராம் வரை சேர்த்துக் கொள்ளும்போது 400 International Unit வைட்டமின் டி கிடைக்கிறது. மற்றபடி அனைத்து வகையான மீன்களிலும் குறிப்பாக ஆழ்கடல் மீன்களில் அதிகளவில் வைட்டமின் டி கிடைக்கிறது. முட்டை, ஈரல், பன்றிக்குடல், பால் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கிறது. கர்ப்பிணிகள் நாளொன்றுக்கு 800 மி.லி. பால் எடுத்துக்கொள்வது அவசியம்.

சைவம் உண்பவர்கள் சோயா பனீர், சோயா மில்க், காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மீன் எண்ணெய் மாத்திரைகளிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு தேன் கலந்து குடித்து விட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தேன் உடலிலுள்ள கொழுப்பை உருக்கி விடும். சூரிய ஒளி படும்போது அந்தக் கொழுப்பு வைட்டமின் டி ஆக உருமாறும்’’

Related posts

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்

nathan

குழந்தையின் உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

nathan

தரையில் படுத்து தூங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

இதோ உங்களுக்காக..!! பழைய சாதத்தை வீணாக்காமல்.. இரண்டே நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம்.. எப்படி தெரியுமா?

nathan

பழங்களை தோலுடன் சாப்பிடுவது உங்களை பலவகை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுமாம்

nathan

தொப்பையை குறைக்க நினைக்கும் பெண்களுக்கு…

nathan

ஆண்களே! இடுப்பைச் சுற்றி டயர் வந்துடுச்சா? டயட் திட்டங்கள்….

nathan

ஏசி’யிலேயே இருப்பவரா?

nathan