என்னென்ன தேவை?
மைதா – 150 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
எண்ணெய் – 125 மில்லி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – ½ தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
டுட்டி பழம் – 200 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 60 மில்லி
பால் – 120 மிலி
எப்படி செய்வது?
முதலில் டுட்டி ப்ரூட்டி மீது சிறிதளவு மைதா மாவு தூவி நன்றாக கலந்து வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க்,பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொது மாவு கலவையை இதனுடன் சேர்த்து கலக்கவும். டுட்டி ப்ரூட்டியையும் இதனுடன் சேர்த்து, பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி பொன்நிறமாகும் வரை பேக் செய்யவும். பின் வெட்டி பரிமாறவும்.