29 1438155771 bottle gourd kootu
சைவம்

சுரைக்காய் கூட்டு

உங்களுக்கு எப்போதும் காரமாக சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள். அதிலும் சுரைக்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமானதும் கூட.

சுரைக்காய் கூட்டு தேங்காய், பருப்பு போன்றவற்றை சேர்த்து செய்வதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த சுரைக்காய் கூட்டின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் – 3 கப் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
பாசிப்பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 3/4 கப்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

29 1438155771 bottle gourd kootu

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயைப் போட்டு, அத்துடன் நீரில் நன்கு கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால், சுரைக்காய் கூட்டு ரெடி!!!

Related posts

கமகமக்கும் வெண்டைக்காய் சாம்பார்

nathan

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

கட்டி காளான்

nathan

வெள்ளை குருமா

nathan

உருளைக்கிழங்கு கைமா கபாப்

nathan

நெல்லிக்காய் சாதம்

nathan

அபர்ஜின் பேக்

nathan

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan