தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் – 3
* பால் – 1 3/4 கப் + 1/4 கப்
* சர்க்கரை – 1/4 கப்
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* மிக்ஸ்டு நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி – 1 பெரிய சிட்டிகை
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, ஒவ்வொரு துண்டையும் நான்கு சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
Bread Payasam Recipe In Tamil
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 3/4 கப் பாலை ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பிரட் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் பாயாசம் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.
* இந்த கட்டத்தில் மீதமுள்ள 1/4 கப் பாலை ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து, நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பிரட் பாயாசம் தயார்.
குறிப்பு:
* இந்த பாயாசம் விரைவில் கெட்டியாகிவிடும் என்பதால் அருகில் இருந்து கவனித்து அடுப்பை அணைக்கவும்.
* பிரட் தூளை பாலில் சேர்த்ததும் அளவுக்கு அதிகமாக கொதிக்க விட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை பாழாகிவிடும்.
* ஒருவேளை பாயாசம் மிகவும் கெட்டியாக இருப்பது போல் தோன்றினால், பாலை சூடேற்றி ஊற்றி கிளறிவிடுங்கள்.