தேவையான பொருட்கள்:
* காளான் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன் (அல்லது) தக்காளி – 1
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* கடுகு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
மசாலா பொடிக்கு…
* மிளகு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 2-3
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ‘மசாலா பொடிக்கு’ கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் காளானை நன்கு சுத்தம் செய்து, நீளவாக்கி வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
Chettinad Mushroom Masala Recipe In Tamil
* பிறகு அதில் காளானை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். நீரை சேர்க்காதீர்கள். ஏனெனில் காளானில் இருந்தே அது வேக தேவையான நீர் வெளியேறும்.
* அடுத்து, அதில் தக்காளி/புளிச்சாறு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், செட்டிநாடு காளான் மசாலா தயார்.