31.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
E 1436692596
மருத்துவ குறிப்பு

இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!

ஆப்பிள் பழம் எல்லா தரப்பு மக்களாலும், விரும்பி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது.

ஆர்கானிக் கலவை, இரும்புச்சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால், ரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது. அதிக ரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும், மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால், ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள்
ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடல் கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால், ஆப்பிள் பழத்தை ஆவியில் வேக வைத்து, பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால், மிகுந்த நன்மை கிடைக்கிறது. திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள், தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.

140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில், 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். உடம்பில் சிலருக்கு கெட்ட வாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படிப்பட்டவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள சென்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் ரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடை இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.

ஆப்பிள் பழம் ஒன்றை துண்டித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், 500 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டு வந்தால் இயற்கையான தாதுபலம் கிடைக்கும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் ஆப்பிள் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
E 1436692596

Related posts

உங்க வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உருவாகினால் வெளிப்படும் அறிகுறிகள்!

nathan

எச்சரிக்கை! உங்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் இதனை கவனமாக வாசியுங்கள்

nathan

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை

nathan

கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்

nathan

கோடையின் வெம்மை உஷ்ண உபாதைகள்… விரட்டும் உபாயங்கள்!

nathan

டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கம்… ஏன்? எப்போது? யாருக்கு?

nathan

இருமல் கொரோனாவின் அறிகுறியா?!’ – சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

nathan