உடல் எடை அதிகம் இருப்பவர்கள், அதனை குறைக்க முயற்சிப்பார்கள். அதற்கு ஏற்றவாறு விரைவில் உடல் எடையைக் குறைக்க மில்லியன் கணக்கில் உடல் எடையைக் குறைக்கும் வழிகள் உள்ளன. ஆனால் உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைப்பது தான் ஆரோக்கியமானது.
அதற்காக மிகவும் கடுமையான உடற்பயிற்சியை நீண்ட நேரம் செய்து, அதன் மூலம் உடல் எடை குறைந்தால், இதுவும் மிகவும் ஆபத்தானது தான். உடல் எடை குறைவதில் என்ன ஆபத்து உள்ளது என்று தானே கேட்கிறீர்கள்..?
ஆம், உடல் எடையானது மெதுவாக நாட்கள் எடுத்து குறையாமல், விரைவில் குறைவதால், அதிகப்படியான சோர்வு முதல் தீவிரமான பல பிரச்சனைகளை வரை அனைத்தும் வரக்கூடும்.
எப்படியெனில் சீக்கிரம் உடல் எடையைக் குறைத்தால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சாமல், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும். இப்படி எந்த ஒரு சத்தும் உடலில் இல்லாவிட்டால், இது உடலின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும்.
இங்கு உடல் எடையை மிகவும் விரைவில் குறைப்பதால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, இனிமேலாவது அதைப் பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்…
கீல்வாதம்
உடல் எடையை மிகக்குறைந்த நாட்களில் அளவுக்கு அதிகமாக குறைத்தால், இரத்தத்தல் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து, அதனால் கீல்வாத பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.
பித்தப்பை
விரைவில் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினால், பித்தப்பையில் பித்தக்கற்கள் உருவாகும். எனவே சீக்கிரம் உடல் எடையைக் குறைக்கும் புரோகிராம்களை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.
ஆற்றல் குறையும்
உடலின் செயல்பாட்டிற்கு கார்போஹைட்ரேட் மிகவும் இன்றியமையாதது. ஏன், தசைகளின் செயல்பாட்டிற்கும் கார்போஹைட்ரேட் அவசியம். ஆனால் சீக்கிரம் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் செயல்களில் கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுவதால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போகும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள
் உடலின் பெரும்பாலான இயக்கத்திற்கு போதிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால், உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.
குளுக்கோஸ் அளவு குறையும்
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பின் உடல் எடையை விரைவில் குறைக்கும் புரோகிராம்மை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் பின்பற்றி வந்தால், உடலின் குளுக்கோஸ் அளவு குறைந்து, அதனால் அவஸ்தைப்படக்கூடும்.
இரத்த அழுத்த குறைவு
வேகமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, இரத்த அழுத்தமானது குறைய ஆரம்பிக்கும். ஆனால் நல்ல உடல் எடையை குறைக்கும் வழி என்றால், அதன் மூலம் இரத்த அழுத்தமானது சீராகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.
பசியற்ற உளநோயாளியாகக்கூடும்
சீக்கிரம் எடையைக் குறைக்க டயட் மேற்கொள்கிறேன் என்று உணவில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தால், அதனால் தற்காலிகமாகத் தான் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதிலும் இதனை பின்பற்றி வந்தால், பசியற்ற உளநோயாளியாவீர்கள். எனவே எப்போதும் கடுமையான டயட் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தம்
உடல் எடையை விரைவில் குறைக்க அளவுக்கு அதிகமாக ஈடுபடுவதோடு, சீக்கிரம் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமென்று மனதில் ஒருவித அழுத்தம் ஏற்படக்கூடும்.
பராமரிக்க முடியாது
உடல் எடையைக் குறைக்க உதவும் ஒருசில புரோகிராம்களை பின்பற்றுவது கடினமாக இருக்கும். மேலும் அப்படி கஷ்டப்பட்டு நினைத்தவாறு உடல் எடையைக் குறைத்துவிட்டால், மீண்டும் அந்த புரோகிராம்மை பின்பற்றமாட்டோம். இதனால் உடலில் எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
உண்ணும் உணவில் மாற்றம்
எடையை சீக்கிரம் குறைக்க உண்ணும் உணவை குறைப்பது அல்லது உணவை தவிர்ப்பது போன்றவை, மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதிலும் வாழ்க்கை முழுவதும் இருந்து தொல்லை தரும்படியான நோய்களின் தாக்கத்திற்கு வழிவகுக்கும்.