28.8 C
Chennai
Monday, Apr 28, 2025
lemon chutney
சட்னி வகைகள்

லெமன் சட்னி

தேவையான பொருட்கள்:

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 3 பல்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பெரிய எலுமிச்சையாக இருந்தால் ஒன்று போதும். இல்லாவிட்டால் 2 எலுமிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் பூண்டு பற்களை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பிறகு அதில் கடுகு சேர்த்து தாளித்து, தட்டி வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் தாளித்ததை சட்னியில் சேர்த்து கலந்தால், சுவையான லெமன் சட்னி/எலுமிச்சை சட்னி தயார்.

குறிப்பு:

* காரத்திற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ரெசிபியில் காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அது அதிக காரம் இருக்காது. அதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

* சட்னி மிகவும் புளிப்பாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கேற்ப மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

* முக்கியமாக இந்த ரெசிபிக்கு நல்லெண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் இந்த ரெசிபியின் கார அளவைக் குறைத்து, சுவையைக் கூட்டுகிறது.

Related posts

தக்காளி – பூண்டு சட்னி

nathan

இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாற தக்காளி கார சால்னா…..

sangika

தயிர் சட்னி

nathan

மாதுளம் சட்னி

nathan

வாழைத்தண்டு சட்னி

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

வல்லாரை துவையல்

nathan

கடலைப்பருப்பு சட்னி (KADALAI PARUPPU CHUTNEY)

nathan

சுவையான பசலைக்கீரை ரெய்தா

nathan