23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
மாரடைப்பை நீக்கும் ஹோமியோ மருந்து
மருத்துவ குறிப்பு

மாரடைப்பை நீக்கும் ஹோமியோ மருந்து

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த திரு. அண்ணாத்துரை அவர்கள். தற்போது நாட்டில் வெடிச்சத்தத்திற்கும், பஸ் கண்டக்டரின் விசில் சத்தத்திற்கும் கூட பயந்த, பதட்டமான, பலவீனமான, உடைந்த, உருக்குலைந்த, நோய் பிடித்த இதயங்களே ஏராளமாய் உள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருதய கோளாறு உள்ளவர்களாக காணப்படுகின்றனர். 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் இருதய நோய் ஒரு கொள்ளை நோய் போல பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் 2010ஆம் ஆண்டில் 10 கோடிப் பேர் இருதய கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர் களாக இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது. ஒருகாலத்தில் இளைஞர்களிடம் அரிதாக காணப்பட்ட இருதய நோய் தற்போது அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இருதய நோய்க்கு ஆட்படுவதாகவும், 25% பேர் மரணமடைவதாகவும் உள்ளது. சர்வதேச அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இருதய நோயினால் மரணம் அடைகின்றனர். பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட பின்பும் 1 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

பெரும்பாலும் இருதய தாக்குதல் எனும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதினாலேயே இம்மரணங்கள் நிகழ்கிறது. 40 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட வர்களையே அதிகம் தாக்குகிறது. இந்தவயதில் தான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சமூகளவிலும், குடும்பளவிலும் கூடுதல் பொறுப்புக்களை சுமக்க வேண்டிய நிலைக்கு வருகிறார்கள். அப்போது அவனது வாழ்க்கைச் சூழலும் வாழ்வின் நெருக்கடிகளும் பரபரப்பான வாழ்க்கை முறையும் மன அழுத்தம் , உயர்இரத்த அழுத்தம் உருவாகி அதன் தொடர்ச்சியாக இருதய தாக்குதல் ஏற்பட்டு தன்னை நம்பியுள்ள குடும்பத்தை பரிதவிக்க வைத்துவிட்டு போய் சேர்ந்து விடுகிறான். விபத்துக்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு அடுத்தபடியாக ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்படுகின்றனர்.

யாருக்கு இந்நோய் வரும்?

கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் அதிகமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உழைப்பாளிகளை விட சோம்பேறித்தனம் உள்ளவர்கள் இருதய பாதிப்பிலிருந்து தப்புவது கடினம். முதுமை நோய்கள், முதுமைக்கால பிரச்சனைகள் இயந்திரமயமாகிப் போன வாழ்வில் முதியோர் நலம் உலகம் முழுவதும் கேள்விக்குறியாகி வருகிறது. முதியோர்களுக்கு முதுமையை சமாளிப்பது பெரிய சவாலாக விளங்குகிறது. இப்பருவத்தில் அவர்களுக்கு விரக்தி, தனிமையுணர்வினால் மனநலமும், மன அமைதியும் குலைந்து இருதய கோளாறு, இரத்த அழுத்தம், நீரிழிவு, நடுக்கம் இவைகளுடன் உதிரியாக வேறுசில நோய்களும் ஒட்டிக் கொள்கின்றன. பெண்களை விட ஆண்களுக்கு 10 மடங்கு இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்குரிய வாய்ப்பு அதிகம். அடிக்கடி கவலைபடு கிறவர்களின் இருத யம் படுமோசமாக பாதிக்கும். இந்தியாவில் நிமிடத்திற்கு 7 பேர் இருதய நோய்க்கு ஆட்படுகிறார்கள்.

காரணம் :

தினம் காலை, பல் துலக்குதல், காபி, டீ அருந்துதல், மலம் கழித்தல், குளித்தல் போன்ற முக்கிய பணிகளைப் போல உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதால், சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டிய இடத்திற்கும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதாலும், மாடியில் ஏறி இறங்க லிப்டை பயன்படுத்துவதாலும், நகர் மயமாதல், வாழ்வாதாரம் சிதைதல், சமூக பொருளாதார பின்னணி, வாழ்வியல் மாற்றங்கள், எண்ணெயில் பொரித்த, வறுத்த, உப்பிட்ட உணவுப் பொருட்களை உணவில் அதிகளவில் விரும்பி உண்ணுதல், பால் மற்றும் பேக்கரி பொருட்களை அதிகம் விரும்பி உண்ணுதல், உடலின் இயக்கத்திற்கு பகையான புகை, மது இரண்டையும் நண்பனாக்கி கொள்வதால் உடல் பருமன் ஏற்பட்டு விடுகிற காரணத்தால் சர்க்கரை நோய் உடலில் தஞ்சம் புகுந்து இரத்த ஓட்ட நாளங்களில் பிரச்சனையை உருவாக்கி இருதய பாதிப்பின்போது வலி உணரா தன்மை ஏற்பட்டு, சத்தமின்றி உடலின் இயக்கத்தை நிறுத்தி மனிதனை ‘பிணம்’ என்று சொல்ல வைத்து விடுகிறது.

தாயின் கருவறையில் ஆரம்பமான சில மாதங்களிலேயே துடிக்கத்துவங்கிய இருதயம் ஓய்வறியா உழைப்பாளியாக வாழ்வின் இறுதி மூச்சுவரை மனித உடலுக்குத் தேவையான இரத்தத்தை விசையுடன் அழுத்தி, உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது. சில வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவர்களுக்கு மூளை முழுமையாக இறந்த பின்பும் இருதயம் இயங்கிக் கொண்டிருக்கும். இருதய இயக்கம் முற்றிலும் நின்ற பின்புதான் இறப்புச் செய்தி அறிவிக்கப்படுகிறது.

இருதயம் அமைவிடம் :

உடலின் நடு மார்புக் கூட்டிலிருந்து சற்று இடது புறமாக சாய்ந்து நுரையீரலுக்கு நடுவே பேரிக்காய் வடிவில் அவரவர் மூடிய கையளவில் 4 அங்குலம் உயரமும் 2.5 அங்குலம் சுற்றளவும் கொண்ட மூன்று விதமான அடுக்குகளைகொண்ட உறுப்பு. (1) இருதய மேலுறை (Pericardium) (2) இருதய தசைகள் (Myocardium) (3) இருதய உள்ளுறை (Endo cardium). இது மட்டுமின்றி நமது வீட்டில் அறைகள் இருப்பது போல இருதயத்திற்குள்ளும் நான்கு அறைகள் உள்ளது. வலது மேலறை (Right artrium) வலது கீழறை (Right Ventricle) இடது மேலறை (Left artrium) இடது கீழறை (Left Ventricle) என உள்ளது. உடலின் அசுத்த இரத்தத்தை இருதயத்திற்கு கொண்டு செல்லும் இரத்த நாளத்திற்கு சிரை என்று பெயர். இருதயத்திலிருந்து உடலின் ஏனைய பாகங்களுக்கு சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளத்திற்கு தமனி என்று பெயர். உடலின் மேல்பகுதி, கீழ்பகுதியிலிருந்து வளர்சிதை மாற்றத்திற்கான பிராண வாயுவை இழந்த இரத்தத்தினை உடலின் மிகப்பெரிய சிரையின் வழியாக இருதய வலது மேலறைக்கு இரத்தம் வந்துசேரும். இங்கு வந்த அசுத்த இரத்தத்தை வலது மேலறை சுருங்கி மூவிதழ் வால்வு வழியாக வலது கீழறைக்கு சென்று பின் நுரையீரல் தமனிவழியாக நுரையீரல் சென்று ஆக்ஸிசன் உதவியுடன் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு நுரையீரல் சிறைவழியாக இருதய இடது மேலறை வந்து சேரும். சுத்த இரத்தத்தை இடது மேலறை சுருங்கி ஈரிதழ் வழியாக கீழறைக்கு வந்தடையும். இங்கிருந்துதான் உடல் முழுவதும் இரத்தம் விநியோகிக்கப்படுகிறது.

லப்-டப் ஒலி

இருதயத்தின் வலது, இடது மேலறைகள் ஒரே சமயத்தில் சுருங்கி இரத்தத்தை மூவிதழ், ஈரிதழ் வால்வு வழியாக கீழறைகளுக்கு செலுத்தும் போது இரண்டு அறைகளின் இடையே உள்ள வால்வுகள் திறக்கும்போது ஏற்படும் ஓசைதான் ‘லப்’ எனும் ஓசை ஆகும். அதேபோல வலது, இடது கீழறைகள் சுருங்கும்போது, மூவிதல், ஈரிதழ் வால்வு மூடிக் கொள்ளும் போது ஏற்படும் ஓசைதான் ‘டப்’ எனும் ஓசையாகும்.

இருதயம் இயங்குவதற்கும், இருதயத் தசைகளுக்குத் தேவையான இரத்தம் இருதயத்தி லிருந்துதான் செல்கிறது. இருதய தசைகளுக்கு செல்ல வேண்டிய இரத்தமும், ஆக்ஸிஜனும் இருதய தசைகளுக்கு கிடைக்க வில்லை என்றால் இருதய தசைகள் பாதிக்கும். இதனால் இருதயச் தசை சுருங்கி விரிவதில் பாதிப்பு நிகழும். இருதயம் செயல்படச் செய்ய இரத்தம் செல்லும் பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் இருதயத் தசைத் திசுக்களில் பாதிப்பு ஏற்படும். இருதய தசைத்திசு பாதித்தால் இருதயம் செயலிழக்கும். தூர உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்பும் இருதயம் தனக்கு தேவையான இரத்தத்தை அனுப்பஇயலாமல் போகும் போது இருதய பாதிப்பு பெரிதாகும். அதனால் இருதயம் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

இருதயத் தசை பாதிப்பு (MYOCARDIAL INFARCTION)

இருதயத்தசை பாதிப்பின் போது இருதயத் திற்கு இரத்தம் கிடைக்காதபோது ஒருவிதமான அழுத்த உணர்வும், வலியும் ஏற்படும். இருதய தமனியின் சுவர்களில் கொழுப்பு படிவதால் இரத்தம் செல்லும் பாதை குறுகும். இரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பின் மீது சிலருக்கு சில சமயங்களில் இரத்தம் உறைவதால் இரத்தம் மேலும், கீழும் போகமுடியாமல் திணறும். இந்த இரத்த நாளங்கள் குறுகி விடுவதால் இரத்த நாளத்தின் முழு பாதையிலும் கொழுப்பு படிவதால் முதுமையில் சிலருக்கு தமனியில் உட்புறச் சுவர் தடிமனாகி விடும்.

மாரடைப்பின் சாதாரண அறிகுறி :

நடு மார்பின் குத்தும் வலி தாடை வரை பரவும். இவ்வலியின் போது ஏப்பமோ நெஞ்சுக்கரிப்போ இருக்காது. தாடை வரை வலி பரவுவதால் பல்வலி என நினைக்கத் தோன்றும். பின்பு இரு கைகளுக்கும் வலி பரவும். நடுமார்பில் இருந்த வலி சிறிது கீழிறங்கி பரவலாக காணப்படும்போது ஜீரணக் கோளாறு என்று தவறுதலாக நோய் நிர்ணயம் செய்ய நேரிடும். இந்த வலியுடன் மார்பின் மீது ஒரு ஆள் ஏறி உட்கார்ந்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். இருதயத்தில் கோளாறு உள்ளதா என்பதை கீழ்காணும் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யலாம்.

1. Electro Cardiogram : (E.C.G.) (இதயமின் வரைபடம்)

2. Echo Cardiogram CRV (இதய நுண் எதிரொலி வரைபடம்)

3. Tread Mill Test (TMT

4. Coronary Angiogram (இருதய தமணி அழுத்தம் பதிவு செய்யும் சோதனை)

5. Lipid Profile (கொழுப்பு கண்டறிதல்)

6. Blood Sugar Level இரத்தத்தில் சர்க்கரை அளவு.

இருதய நோயாளிக்கு சர்க்கரை முழுக் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் கொழுப்பு இரத்த நாளத்தை அடைத்துவிடும். மேலும் சர்க்கரை நோயாளி இருதயத்தில் ஏற்படும் வலியை உணரமாட்டார். சிறிய சுவாசம், தற்காலிக மூச்சிறைப்பு, மூச்சுத்திணறல் இருந்தால் மாரடைப்பின் அறிகுறி. இருதய துயர் ஒருமுறை வந்தால் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்று முடிவுகட்ட வேண்டியதில்லை. இது நமக்கான வேகத்தடை என்று புரிந்து கொள்ளவேண்டும். இதன் பின்பாவது சிறியளவில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். இருதய நோய்களை பொறுத்த வரை முதல் முறையாக ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்கள் ஹோமியோபதி மருத்துவத்தில் திறமை மிக்க மருந்து தேர்வு கலையில் புலமைமிக்க மருத்துவர் களிடம் சிகிச்சை பெறும்போது தன்வாழ்நாள் முழுவதும் தம் மனைவி மக்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழமுடியும்.

ஹோமியோபதி சிகிச்சையில் இருதய தாக்குதலுக்கு பயன்படும் சில மருந்துகள் :

இரத்த சோகை, இதயத்திசு அழிதல், தற்காலிக இருதயவலி, இருதய வீக்கம், இருதயத்தில் படிந்துள்ள கொழுப்பை கரைக்கும் மிக முக்கிய மருந்து-கிரேட்டகஸ்

பெரிகார்டிய சவ்வு ஒட்டிக் கொள்ளுதல், ஈரிதழ் வால்வு, பிரச்சனை நடு மார்பில் திடீரென்று தோன்றும் வலி- கன்வலேரியா

இருதயத்தில் கடுமையான குத்தல் வலி ஏற்பட்டு இருதோள்பட்டை அக்குள், கைவிரல்கள் வரை பரவும் இத்துடன் மதமதப்பு சேர்ந்திருத்தல் – லெட்ரோ டெக்டஸ்

இருதய கொழுப்பை கரைத்து, வீக்கத்தை குறைத்து, இருதயத்தை பலப்படுத்தும் டானிக்-கிரேட்டகஸ்

இருதயத்தை இரும்பு பட்டையால் நெறுக்குவது போன்ற வலி – காக்டஸ்

திடீரென ஏற்படும் இருதய வலியுடன் மயக்கம் – அமெல்நைட் Q

கடுமையான இருதய துடிப்பு, அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் சட்டைக்கு மேலே கூட தெரியும். மார்பு காம்பிற்கு கீழே கிழிக்கும் வலி இடது கைக்கு பரவும் – ஸ்பைஜிலியா

இரவில் கடுமையான படபடப்புடன் மூச்சுத்திணறல் இருதய வால்வுகளில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் – ஸ்பாஞ்சியா சிறிது அசைந்தாலும் இருதயம் நின்று விடும் என்ற பயம் மிக குறைவான நாடிதுடிப்பு இருக்கும் -டிஜிட்டாலிஸ்

அசையாமல் இருந்தால் இருதயம் நின்றுவிடும் என்ற பயம் -ஜெல்செமியம்

அசைந்தாலும், அசையாமல் இருந்தாலும் இருதயம் நின்றுவிடும் என்ற பயம் -லொபிலியா

மது, புகை, புகையிலை போன்றவையால் இருதயத்தில் ஏற்படும் பாதிப்பு – ஸ்ட்ரபேந்தஸ்

சிறுநீர்போகும் போது இருதய வலி மிக கடுமையாகும் சிறுநீர் வெளியேறியதும் வலி தணியும் – லிதியம்கார்

இரவில் இருதயம் நசுங்குவது போன்ற வலி, ஏற்படுவதால் மார்பை கைகளால் பிடித்துக் கொண்டு மரணம் நிகழும் என்ற பயம் -ஆர்னிகா

மூட்டுவலிகள் இருதயத்தை நோக்கி செல்லுதல் -கோல்சிகம்

இன்னும் சில மருந்துகள் :

கால்மியா, அகோனைட், அதோனிஸ் வெர்னாலீஸ், ஆரம்மெட், அக்டியா ரஸிமோசா, காலிகார், லைகோபஸ், ஆக்ஸôலிக் ஆசிட், நாஜா.

இருதய நோயாளிகள் கவனத்திற்கு :

ஸ்ட்ராங் காபி நல்லதல்ல. காபியில் காஃபின் எனும் நச்சுப்பொருள் உடலில் படபடப்பு உணர்வை தூண்டும்.

உடல் பருமன் உள்ளவர்கள் திட்டமிட்டு உடல் எடையை குறைக்கவேண்டும்.

மீன் மிகச் சிறந்த உணவு.

தினம் 45 நிமிடம் நடப்பதால் உடலின் கொழுப்பு குறையும். இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

புகைப் பழக்கம் உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை குறைக்கும்.

வாய்விட்டு சிரிப்பது நுரையீரலுக்கும், இதயத்திற்கும் நல்லது.

காலையில் தேநீருக்கு பதில் எலுமிச்சை சாறு கலந்த நீர் பருகுங்கள்.

மாலை நேர நொறுக்கு தீனியை தவிர்த்து முளைக்கட்டிய பயிறு வகைகளை சாப்பிடுங்கள்.

சமையலில் எண்ணெய் அளவை குறையுங்கள். மாதம் ஒரு நபருக்கு 500 ml போதுமானது.

வாரம் 2 வேளை உணவுக்கு பதில் பழச்சாறு அருந்துங்கள்.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறு தவிர்த்தல் நலம்.

நீரிழிவு நோயாளிகள் நோன்பு இருத்தல் கூடாது.

காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே கழுவி விடுங்கள்.

ஆரஞ்சு பழமும், பச்சை திராட்சையும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் நல்லதல்ல.

(சாத்தூரில் 2-11-2009 ‘இதய நலமும் ஹோமியோபதியும்’ கருத்தரங்கில் பேசிய Dr.S.வெங்கடாசலம் உரையிலிருந்து கட்டுரை வடிவமாக்கியவர் Dr.K.வெள்ளைச்சாமி RHMP.,RSMP)

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

heart

Related posts

தொரிந்து கொள்ளுங்கள்! மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

nathan

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

nathan

பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!

nathan

மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்

nathan

பெண்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்தான பிரச்சனையை சரி பண்ண…

nathan

உங்களுக்கு 30 வயதாகின்றதா? மருத்துவர் கூறும் தகவல்கள்!

nathan

பேக்டீரியா தொற்றினை தவிர்க்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியவை! தெரிஞ்சிக்கங்க…

nathan

கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான விஷயங்கள்

nathan

டூத் பேஸ்டை கொண்டு கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி தெரியுமா?

nathan