தேவையான பொருட்கள் :
பன்னீர் – கால் கிலோ
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – கால் கிலோ
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 10,
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்,
கரம் மசாலா – 1 ஸ்பூன்,
பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு – சிறிதளவு,
உப்பு – ருசிக்கேற்ப,
வெண்ணெய் – 50 கிராம்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை தனித்தனியாக விழுதாக அரைக்கவும்.
• பன்னீரை லேசாக டீப் பிரை அல்லது மைக்ரோ வேவ் ஓவனில் 3 நிமிடம் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• கடாயில் சிறிது வெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காய விழுது, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் சிவப்பாகும் வரை வதக்கவும்.
• பின் தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
• கிரேவிக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
• அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும், மீதியுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.
• கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
• சப்பாத்தி, நான், ரோட்டி, சாதம் எல்லாவற்றிற்கும் ஏற்ற சூப்பர் சைட்டிஷ்.