03 banana appam
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பழ அப்பம்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்,
வெல்லம் – 1/2 கப் (பொடித்தது),
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
கனிந்த வாழைப்பழம் – 1,
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை,
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை,
தண்ணீர் – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!!!03 banana appam

Related posts

பொங்கல் ஸ்பெஷல்: சேமியா இனிப்பு பொங்கல்

nathan

கேழ்வரகு – சிறுதானிய குணுக்கு

nathan

கேழ்வரகு புட்டு

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவை இனிப்பு பொங்கல்

nathan

தீபாவளிக்கான சாக்லேட் பர்பி – செய்முறை!

nathan

சுவையான ஜிலேபி,

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

சத்தான கார்ன் ரவை கிச்சடி

nathan

இறால் வடை

nathan