28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ef4d51ff 8fda 4b78 9a15 f2bcfbeb984c S secvpf
மருத்துவ குறிப்பு

காக்காய் வலிப்பு வரக்காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

திடீரென்று உடம்பு வெட்டி வெட்டி இழுப்பதையும் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து விடுவதையும் வலிப்பு என்று சொல்கிறோம். பொதுவாக நம் கையையும், காலையும் அசையச் செய்வது மூளை தான்.

மூளையில் இருந்து வெளிப்படும் மின் சக்தி தான் இதற்கு காரணம். இந்த மின் சக்தி மிகவும் அதிகரித்து உடலுறுப்புகள் இயல்பான நிலைக்கு மாறான வகையில் தன்னிச்சையாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவதைத் தான் வலிப்பு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு லட்சம் மக்களை எடுத்துக் கொண்டால் அதில் 650 பேருக்கு ஏதாவது ஒரு வகையான வலிப்பு இருக்கும். மூளை, நரம்பு மண்டல நோய்களில் அதிகமானவர்களை தாக்குவது வலிப்பு நோய் தான்.

கை, கால்கள் வெட்டி இழுப்பதைத் தொடர்ந்து சற்று நேரம் சுய நினைவு இல்லாமல் இருப்பதை ‘காம்ப்ளக்ஸ் சீஷர்’ என்கிறார்கள். வலிப்பின் போது சுயநினைவும் இருந்தால் அது ‘சிம்பிள் சீஷர்’. சிலருக்கு கை, கால் வெட்டி இழுக்காமல் சுய நினைவு மட்டும் தவறிப்போகும். இதை ‘ஆப்சன்ஸ் சீஷர்’ என்கிறார்கள்.உடலின் ஒரு பகுதி மட்டும் நம் கட்டுப்பாட்டை மீறி அதீதமாக அசைவது ‘பார்ஷியல் சீஷர்’. முழு உடலும் துடித்து, உடல் பகுதிகள் அனைத்துமே சிறிதுநேரம் விறைத்து வில்லாக வளைந்து ‘வெடுக் வெடுக்’ என வெட்டி இழுப்பதை ‘ஜெனரலைஸ்டு சீஷர்’ என்கிறார்கள்.

மூளையின் உணர்ச்சிகள் இருக்குமிடம் பொட்டு மடல். இங்கு உருவாகும் வலிப்பின் காரணமாக கோபம், கடும் சோகம் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் சில நொடிப் பொழுதுகள் ஏற்படும். இது ‘சைக்கோ மோட்டார் சீஷர்’. இதே பொட்டு மடலில் சிரிப்பு கட்டுப்பாடு மையத்தில் தோன்றும் வலிப்பு காரணமில்லாமல் பெரும் சத்தத்துடன் ராட்சதத்தனமாக சிரிப்பை ஏற்படுத்தும். இதற்கு ‘ஜெலாஸ்டிக் எபிலெப்ஸி’ என்று பெயர். அதாவது சிரிப்பு வலிப்பு என்று பெயர் வைத்து விட்டார்கள். திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இதயம் விரைவாகத் துடிக்கும். வியர்த்துக் கொட்டும். இதெல்லாம் உடலுறவின் போது ஏற்படும் விளைவுகள். வலிப்பிலும் அப்படியொரு வகை உண்டு. இது இனவிருத்தி கட்டுப்பாடு மையத்தில் தோன்றும் வலிப்பு. பிறப்புறுப்புகளில் அளவுக்கதிகமான இன்பத்தையும், தாங்க முடியாத வேதனையையும் ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட வகை வலிப்பில் முதலில் ஒரு விரல் மட்டும் வெட்டி வெட்டி இழுக்கும். பிறகு மற்ற விரல்கள் தொடர்ந்து, உள்ளங்கை, முழங்கை என்று வலிப்பு பரவும். இதை ‘எபிலெப்ஸி மார்ச்’ என்கிறார்கள்.

இதுதவிர வேறு சில வகை வலிப்புகளும் உண்டு. ஐஸ் கிரீம் சாப்பிட்டால் வரும். இது ‘ஐஸ் கிரீம் எபிலெப்ஸி’, வெந்நீரில் குளிக்கும் போது வருவது ‘பாத்திங் எபிலெப்ஸி’, எதையாவது படித்தால் வருவது ‘ரீடிங் எபிலெப்ஸி’, டிவி பார்க்கும் போது வருவது ‘டெலிவிஷன் எபிலெப்ஸி’, உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் வலிப்பை ‘காய்டஸ் எபிலெப்ஸி’ என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வலிப்புகள் அத்தனைக்கும் ஒன்று சேர்த்து ஒரு பொதுப் பெயரையும் வைத்திருக்கிறார்கள். அது ‘ரிப்ளக்ஸ் எபிலெப்ஸி’ என்பது தான். வலிப்பு என்ன காரணத்தினால் வருகிறது என்பதை தெரிந்து கொண்டு அவற்றில் ஈடுபடாமல் இருந்தாலே அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.ef4d51ff 8fda 4b78 9a15 f2bcfbeb984c S secvpf

Related posts

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

nathan

இந்த குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு ரொம்ப அதிகமாம்…

nathan

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan

மஞ்சள் நிறமாக பற்கள் மாற என்ன காரணம்?

nathan

உங்களுக்கு மாத்திரை எதுவும் போடாமல் குடலை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய

nathan

ஆற்றலை தரும் சப்போட்டா…!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?

nathan

உங்களுக்கு தெரியுமா 30 வயதில் கட்டாயம் செய்ய வேண்டிய சில முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்!!!

nathan