2 mango milkshake
பழரச வகைகள்

மாம்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

* மாம்பழ துண்டுகள் – 1 கப்

* பால் – 1 1/2 கப் (கொதிக்க வைத்து குளிர வைத்தது)

* சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

* ஐஸ் கட்டிகள் – சிறிது

2 mango milkshake

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் மாம்பழத் துண்டுகளையும், சர்க்கரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 1/2 கப் பாலை ஊற்ற வேண்டும்.

* பின்பு ஐஸ் கட்டிகளை சேர்த்து மூடி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Mango Milkshake Recipe In Tamil
* உங்களுக்கு கெட்டியாக வேண்டுமானால் அதற்கேற்ப பாலை ஊற்றுங்கள். அதுவே நீர் போன்று வேண்டுமானால் சற்று அதிக பாலை ஊற்றுங்கள்.

* இப்போது சுவையான மாம்பழ மில்க் ஷேக் தயார்.

குறிப்பு:

* விருப்பமுள்ளவர்கள் இந்த மாம்பழ மில்க் ஷேக்கின் மேல் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்களை பொடியாக வெட்டி மேலே தூவிக் கொள்ளலாம்.

* இல்லாவிட்டால், அதன் மேல் ஐஸ் க்ரீம் அல்லது பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகளையும் மேலே தூவிக் கொள்ளலாம். இதனால் மாம்பழ மில்க் ஷேக்கின் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

Related posts

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

nathan

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்

nathan

வாட்டர் மெலன் சோடா

nathan

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

nathan

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

ஃப்ரூட் டெஸர்ட்

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan