27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
0f8d753b b88e 47e0 8776 19ba1717dd8d S secvpf
மருத்துவ குறிப்பு

தாம்பத்தியம் சிறக்க உடல்ரீதியாக தயாராவதோடு மனரீதியாகவும் தயாராக வேண்டும்

எல்லோராலும் எப்போதும் இயல்பான உச்சக்கட்ட நிலையை அடைய முடிவதில்லை. மகிழ்ச்சிகரமான உறவு அமைந்தால் மட்டுமே மனநிறைவான உச்ச கட்டத்தை அடையமுடியும். அதற்கான வழிமுறைகளையும், தம்பதியரியரின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளனர் நிபுணர்கள்.

எந்த ஒரு விசயத்திற்கும் துணையை காதலுடன் அணுகினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காமத்திற்கு காதலின் வெளிப்பாடு அதிகம் இருக்கவேண்டும். சின்னச்சின்ன பரிசுகள், தொடுகைகள் என அன்றைய உறவிற்கான தேவையை அன்பால் வெளிப்படுத்த வேண்டும். துணையின் தேவையை உணர்ந்து உங்களின் பதிலை அன்பால் வெளிப்படுத்துங்கள். தூய அன்பும், காதலும் தாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்திற்கு அவசியம்.

உடல் ரீதியான சேர்க்கைக்கு முன்னதாகவே மனரீதியாக இணைந்து வெளிப்படுத்தும் அன்பும் உணர்வுகளின் மூலம் மட்டுமே மடை திறந்த வெள்ளம் போல உச்சக்கட்ட உணர்வை அடைய முடியும். காதலோ, காமமோ ஒருவருக்கொருவர் தேவைகளை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. துணை கொஞ்சம் கூச்ச சுபாவத்தோடு இருந்தால் என்ன வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எங்கு தொட்டால் என்னமாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை நீங்களும் உங்களின் துணைக்கு தெரிவிக்கலாம்.

உங்கள் துணையிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காதலின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தொடுகை முக்கியம். தொடத் தொடத்தான் உறவு மலரும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொடங்குவதை விட மென்மையான ஸ்பரிசம். சின்னச் சின்னச் விளையாட்டு என தொடங்கலாம். அதில் சிலிர்க்கும் துணையின் மூலம் உறவை தொடர்வதில் தடையேதும் இருக்காது. காமம் உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் அவசரத்திற்கு இடமில்லை.

ரிலாக்ஸ்சாக வெளிப்படுத்தினால் மட்டுமே கூடுதல் சுகமும், உச்சக்கட்ட உணர்வும் கிடைக்கும். டென்சனோ, அவசரமோ காட்டினால் மகிழ்ச்சிக்கு பதிலாக அவதிதான் கிடைக்கும். காதலோ, காமமோ உங்கள் தேவையை துணைக்கு எப்படி புரியவைக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. எனவே காதோடு மெதுவாக பேசி உங்களின் தேவையை உணர்த்துங்கள். கணவனோ, மனைவியோ உங்களின் தேவையை யார் வேண்டுமானலும் உணர்த்தலாம்.

எந்த ஒரு வேலைக்குமே சக்தி ரொம்ப முக்கியம். அதுவும் இது வாழ்க்கை விளையாட்டு. இதில் எப்படி, எங்கே சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்ளவேண்டும். துணைக்கு வலிக்காமல், காயப்படுத்தாமல், விவேகமான முறையில் சக்தியை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றிதான். தம்பதியர் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். யாரும் யாரையும் டாமினேட் செய்யவேண்டும்.

உறவில் ஈடுபடவேண்டும் என்றால் அதற்காக உடல்ரீதியாக தயாராவதோடு மனரீதியாகவும் தயாராக இருக்கவேண்டும். இருவருமே அன்றைக்கு தயார் என்றால் மட்டுமே அற்புதமான உறவில் ஈடுபடமுடியும். மனமும், உடலும் தயார் நிலையில் அமைந்து அன்றைய உறவில் ஈடுபடும் போது ஒவ்வொரு செயலும் அற்புதமாக அமையும். ஆழமான அன்பின் வெளிப்பாடாக அமையும் அன்றைய உறவில் அற்புதமான உச்சகட்டமும் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.

0f8d753b b88e 47e0 8776 19ba1717dd8d S secvpf

Related posts

ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம்-தெரிந்துகொள்வோமா?

nathan

இன்சுலினுக்கு மாற்றாக பி.சி.ஜி தடுப்பூசி! சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு காலமா?

nathan

சிறுவயதில் பருவமடையும் பெண் குழந்தைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

nathan

இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உடனடியாக உங்கள் சிறுநீரகத்தை பரிசோதிக்கவும்.

nathan

சிறுநீரகம் காப்போம்!

nathan

வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’

nathan

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

உங்கள் கவனத்துக்கு கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?அப்ப இத படிங்க!

nathan