25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
150px Sun flower 3
மருத்துவ குறிப்பு

மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி

டித்தோனியோ டிவைர்சிபோலியா என்பது இதன் தாவர பெயராகும். சூரிய காந்தி பூவை போலவே உள்பகுதிகளில் விதைகள் மற்றும் மகரந்த துகள்கள் காணப்படுகின்றன. சூரிய காந்தியைப் போல காணப்பட்டாலும் இது மரமாக வளரும் தாவர வகையை சேர்ந்ததாகும். இதன் இலைகள், பூக்கள் ஆகியவையும் மருந்தாக பயன்படுகிறது.

இது மேற்பூச்சு மருந்தாக மட்டுமின்றி உள்மருந்தாக எடுத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. மலேரியா காய்ச்சலை போக்கக் கூடிய சிறந்த மருந்தாக மர சூரிய காந்தி விளங்குகிறது. சின்கோனா என்று அழைக்கப்பட கூடிய கொய்னா மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துப் பொருள் குளோரோ குயின் என்ற மலேரியா மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. அதே போன்ற ஒரு குணத்தை மர சூரிய காந்தியும் பெற்றிருக்கிறது.

மர சூரிய காந்தி அல்லது காட்டு சூரிய காந்தி என்று அழைக்கப்படும் இதன் மலர்களை கொண்டு மலேரியா காய்ச்சல், சாதாரண காய்ச்சல் ஆகியவற்றை போக்கும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். மர சூரிய காந்தி பூக்கள், தனியா, பனங்கற்கண்டு. மர சூரிய காந்தியின் ஒரு பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் அரை ஸ்பூன் தனியா மற்றும் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து கஷாயம் தயார் செய்ய வேண்டும்.

இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் பருகுவதன் மூலம் மலேரியா உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை மருந்தாக எடுத்துக் கொள்ளும் போது ஒரு வேளைக்கு கஷாயம் தயாரிக்க ஒரு பூ மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என்ற அளவில் ஒரு வாரம் வரையில் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூடவே மருத்துவரின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்வது நல்லது. மர சூரிய காந்தி பூக்கள் நுண் கிருமிகளை போக்கக் கூடியது.

பூஞ்ச காளான்களை அழிக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக மலேரியா போன்ற காய்ச்சலை தணிக்கக் கூடியதாகவும் மர சூரிய காந்தி விளங்குகிறது. மேலும் இது உடல் வலியை போக்கக் கூடியதாகவும் உள்ளது. முறிந்த எலும்புகளை கூட இணைக்கும் வல்லமை மர சூரியகாந்திக்கு உள்ளது. தற்போது இதை பயன்படுத்தி சிராய்ப்பு காயங்களுக்கான, சிறிய அளவிலான தீக்காயங்களுக்கு மேற்பூச்சு மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மர சூரிய காந்தி பூ, தேங்காய் எண்ணெய், சீரகம்.

மர சூரிய காந்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை வாணலியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பூவின் பசையை சேர்க்க வேண்டும். பூக்கள் நன்றாக பொரியும் வரையில் சிறிய வாட்டத்துடன் எண்ணெய்யை நன்றாக காய்ச்ச வேண்டும். அவ்வாறு பொரிந்து வரும் வேளையில் சிறிதளவு சீரகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சீரகமும் பொரிந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட வேண்டும். இது ஆறிய பிறகு இந்த தைலத்தை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது ஏற்படும் சிறிய அளவிலான சிராய்ப்புகள், காயங்கள், சிறிய அளவிலான தீக்காயங்களுக்கு இவற்றை மேற்பூச்சாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மர சூரிய காந்தி நமக்கு பல்வேறு வகையிலும் மருத்துவ பொருளாக இருந்து பயன் அளித்து வருகிறது.

150px Sun flower 3

Related posts

மாரடைப்பை நீக்கும் ஹோமியோ மருந்து

nathan

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா சொரியாசிஸ் நோய் வரக் காரணங்களும் அறிகுறிகளும்….!

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை இதெல்லாம் உடன் கலந்து சாப்பிட்டால் போதும்.. பல நோய்களுக்கு மருந்தாகுமாம்..!

nathan

கருவுற்ற தாய்மார்களுக்கான பயிற்சி வகுப்புகள்

nathan

வெந்தயம் – மருத்துவ குணங்கள்

nathan

உங்களுக்கு தலைவலி வருவதற்கு எதெல்லாம் காரணமா இருக்கும்-ன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டை மாஸ்க் போடுறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க

nathan

இரவில் பெற்றோர் அருகில் குழந்தைகளைப் படுக்க வைக்கலாமா?

nathan