24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
cabbage vada 1636720049
சிற்றுண்டி வகைகள்

முட்டைக்கோஸ் வடை

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1.5 கப்

* முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகா – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – ஒரு கையளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை நன்கு கழுவி, பிளெண்டரில் போட்டு தேவையான நேரத்தில் லேசாக நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரை சேர்த்து விட வேண்டாம்.

* பின்பு ஒரு பௌலில் அரைத்த உளுத்தம் மாவு, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், நீரில் கையை நனைத்து, சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.

Related posts

மட்டன் கொத்து பரோட்டா

nathan

பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan

மினி வெஜ் ஊத்தப்பம்

nathan

சம்பல் ரொட்டி

nathan

முள்ளங்கி புரோட்டா

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan

சூப்பரான மிளகாய் பஜ்ஜி

nathan

கம்பு தோசை..

nathan

சுவையான வடைகறி செய்ய !!

nathan