29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
vinegar
வீட்டுக்குறிப்புக்கள்

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் கறை படிந்தால், அதனைப் போக்குவது சற்று கடினம்.

ஏனெனில் மற்ற தரைகளை சுத்தம் செய்வது போல், இந்த மார்பிளால் செய்த தரையை சுத்தம் செய்தால், மார்பிள் கல்லில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த கரையை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அத்தகைய மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்குவதற்கு ஒரு சில எளிமையான பொருட்கள் உள்ளது அது என்னவென்று பார்ப்போமா.

டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்யப் பயன்படுவதில்லை. மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்கவும் தான் உதவுகிறது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம், டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்து, பின் ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இதனை கறை உள்ள மார்பிள் தரையில் தேய்த்தால், கறைகள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

வினிகர்
மார்பிள் தரையில் உள்ள கெட்சப் மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு, வெள்ளை வினிகரை ஒரு துணியில் நனைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்தால், கறை நீங்கி மார்பிள் தரையானது பளிச்சென்று மின்னும்.

டிஷ் வாஷ் திரவம்
எளிய முறையில் மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க வேண்டுமெனில், பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தைப் பயன்படுத்துவது தான். இதற்கு அந்த திரவத்தை கறை உள்ள இடத்தில் ஊற்றி நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். முக்கியமாக, மார்பிள் தரைக்கு கடினமான சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. அது மார்பிள் தரைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சோப்பு தண்ணீர்
மார்பிள் தரை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்று மின்ன வேண்டுமெனில், ஸ்பாஞ்சை சோப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, தரையைத் துடைக்க வேண்டும். அதிலும் இந்த முறையை, தரையில் ஏதேனும் கொட்டும் போது செய்தால், தரையில் கறை படிவதை தவிர்க்கலாம்.

பேக்கிங் சோடா
மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த வழியென்றால், அது பேக்கிங் சோடா தான். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், கறைகள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக போட வேண்டாம்.
vinegar

Related posts

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

உங்களுக்காக!!! பயனுள்ள எளிமையான மருத்துவக்குறிப்புகள்…

nathan

தெரிந்துகொள்வோமா? தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டம் குறித்து மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்ன தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க கஷ்டங்கள் நீங்க. தொடர்ந்து 21 நாள்கள் இந்த பொருள்களை படுக்கையில் வையுங்க!!

nathan

உங்களுக்கு தெரியுமா நீர்முள்ளி மூலிகையின் மருத்துவ பயன்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தாய் வீட்டிலிருந்து இதையெல்லாம் கணவன் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள்!

nathan

முக்கியமான அபாயகரமான நோய்க்கு ஏசி தான் காரணமாக இருக்கிறது!

sangika

உண்மைகள்…இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்…!

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika