28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
05 1430828485 6 cloves
மருத்துவ குறிப்பு

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!!

இன்றைய நவீன உலகில் பலரும் பல்வேறு வலிகளால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அப்படி வலியால் அவஸ்தைப்படும் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் ஒரு மாத்திரை கடையையே வைத்துக் கொண்டு சுற்றுவார்கள்.

மேலும் அப்படி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளைப் பார்த்தால், மருத்துவர் பரிந்துரைத்ததாக இருக்காது. மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த ஒரு பிரச்சனைக்கும் எப்போதும் மாத்திரைகளை எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், அதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும்.

ஆனால் நம் உடலில் ஏற்படும் வலிகளுக்கு சமையலறையில் உள்ள ஒருசில உணவுப் பொருட்களே சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. இங்கு அப்படி வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

செர்ரி

ஆராய்ச்சி ஒன்றில் இந்த சிறிய செர்ரிப் பழங்களானது பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்ய உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உடற்பயிற்சி செய்து முடித்த பின், ஒரு டம்ளர் செர்ரி பழ ஜூஸ் அல்லது ஒரு பௌல் செர்ரிப் பழங்களை சாப்பிட்டால், உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் கடுமையான தசை வலியில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

அக்காலத்தில் இருந்தே பூண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பூண்டினை தட்டி ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால், மூட்டு வலிகள் பறந்தோடும்.

இஞ்சி

ஆயுர்வேத மருத்துவத்தின் படி, இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், தசை மற்றும் மூட்டு வலிகளை சரிசெய்யலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும் இஞ்சி, மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்ஸ்

ஓட்ஸில் மக்னீசியம் அதிகம் உள்ளதால், இதனை பெண்கள் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் ஓட்ஸில் ஜிங்க் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது வயிற்று வலி ஏற்படாமல் இருக்க பெண்கள் இதனை சாப்பிடுவது நல்லது.

திராட்சை

ஒரு கப் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துக்களானது முதுகுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வலியைக் குறைக்கும்.

கிராம்பு

பல் வலிகளுக்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகும். மேலும் கிராம்பை பல் வலியின் போது வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

05 1430828485 6 cloves

Related posts

குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan

ஜாக்கிரதையா இருங்க… உங்களுக்கு இப்படி அடிக்கடி வருதா?… அப்போ அந்த நோயா இருக்கலாம்…

nathan

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan

உடலில் மொத்த கொழுப்பும் கரைய வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?

nathan

கல்லீரல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

அமிலத்தை குடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது?

nathan