29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
eea903b7 5b99 4f31 ad32 ba656fb54052 S secvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் டர்ர்ர்ர், புர்ர்ர்ரர் பிரச்சனையா? இதோ எளிய வீட்டு வைத்தியம்

எந்த தவறு செய்தாலும் ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை நம்மவர்களிடையே இருந்தாலும் “குசு”விட்டதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை யாரிடமும் இல்லை. காரணம் இது மானப்பிரச்சனை, கேலி கிண்டல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் தான் டர்ர்ர், புர்ர்ர் அவஸ்தி ஒருவரின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

உருளைக்கிழங்கு மட்டும் தான் இதற்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. நாம் உண்ணும் முறையில் இருந்து, நாம் செய்ய தவறிய சில பழக்கங்களின் காரணமாகவும் கூட இந்த வாயுத்தொல்லை பிரச்சனை நீடித்து இருக்கலாம். இதை அடக்குதல் மிகவும் தவறு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில எளிய முறைகளை நீங்கள் கடைப்பிடித்தாலே போதுமானது, வாயுத்தொல்லையில் இருந்து தீர்வுக் கண்டுவிடலாம்..

உணவுத் தேர்வு நிறைய உணவுகளில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. இவை மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தும். முள்ளங்கி, வறுத்த உணவுகள், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் என நிறைய உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். எனவே, இந்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த உணவுகளை உண்ட பிறகு 10 நிமிடங்கள் வாக்கிங் சென்று வர மறக்க வேண்டாம். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டுமே தவிர விழுங்க கூடாது. அப்படியே விழுங்குவதால் கூட வாயுத்தொல்லை ஏற்படலாம். எனவே, நாம் உணவை நன்கு மென்று உண்ணுதல் நல்லது.

செரிமானம் மற்றும் வாயுத்தொல்லை சார்ந்த பிரச்சனைக்கு ஓர் சிறந்த நிவாரணி இஞ்சி. உங்கள் உணவில் தினமும் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் வாயுத்தொல்லைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

நீண்ட நாள் வாயுத்தொல்லை பிரச்சனை இருந்து வந்தால் யோகா பயிற்சியின் மூலமாக கூட தீர்வுக் காண முடியும். பவன் முக்தாசனா மற்றும் வீராசனம் போன்ற ஆசனங்கள் வாயுவை வெளியேற்றி வயிற்றை நன்கு உணர வைக்க உதவுகிறது.

செரிமானக் கோளாறின் காரணமாக கூட வாயுத்தொல்லை அதிகம் ஏற்படலாம். உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி, சூடாக ஒரு கப் டீ அல்லது கொஞ்சம் சுடுநீர் அல்லது ஒரு வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுதல் போன்றவை நல்ல தீர்வுக் காண உதவும்.

எலுமிச்சை நீரில் சிறிதளவு பேக்கிங்பவுடர் சேர்த்து நன்கு கலந்து குடித்தால் வாயுத்தொல்லைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

eea903b7 5b99 4f31 ad32 ba656fb54052 S secvpf

Related posts

உங்களுக்கு தெரியுமா கொசுக்களால் இவ்வளவு நோய்கள் பரவுகிறதா?எப்படி மீளலாம்

nathan

உங்க மேல எப்பவும் வியர்வை நாற்றம் வீசுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கால் மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

காலையில எப்ப பார்த்தாலும் ரொம்ப சோர்வா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா இவையெல்லாம் தான் பெண்களால் அடக்கி கொள்ளவே முடியாத ஆசையாம்.. என்னென்ன தெரியுமா?..

nathan

மாதுளை இலையில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

nathan

வீட்டில் கண் திருஷ்டி பாசிமணியை எந்த இடத்தில் தொங்க விடுவது நல்லது?தெரிந்துகொள்வோமா?

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan