30.3 C
Chennai
Tuesday, Dec 3, 2024
banana halwa 1635340233
இனிப்பு வகைகள்

சுவையான வாழைப்பழ அல்வா

தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 5 மசித்தது அல்லது அரைத்தது

* சர்க்கரை – 1/4 கப் + 1 கப்

* நெய் – 1/2 கப் முதல் 3/4 கப்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப்

* பாதாம், முந்திரி, திராட்சை – தேவையான அளவு

banana halwa 1635340233

செய்முறை:

* முதலில் ஒரு பேனில் நெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்த அல்லது மசித்த வாழைப்பழத்தை சேர்த்து கிளறி, 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு வெந்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

* அதே வேளையில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை பாகானது கேரமல் நிலைக்கு/ப்ரௌன் நிறத்தில் மாறி வரும் போது, அதில் வாழைப்பழத்தை சேர்த்து கிளறி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* அப்போது அதில் தேவையான அளவு நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.

* அதே வேளையில், ஒரு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து அல்வாவில் ஊற்றி கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதை இறக்கி, நெய் தடவிய பேனில் ஊற்றி பரப்பி, குளிர வைத்து, பின் அதை துண்டுகளாக்கினால், சுவையான வாழைப்பழ அல்வா தயார்.

Related posts

தேங்காய் பர்ஃபி

nathan

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

nathan

தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி

nathan

மில்க் ரொபி.

nathan

தேங்காய் பர்பி

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

பாதுஷா

nathan

தித்திப்பான மைசூர்பாக்

nathan

பூந்தி லட்டு

nathan