மழைக்காலத்தில் பல சரும பிரச்சனைகள் ஏற்படும். இதில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று, தோல் வெடிப்பு, எரிச்சல் மற்றும் சொறி ஆகியவை அடங்கும்.மழைக்காலம் எதுவாக இருந்தாலும், பருவகால சரும பிரச்சனைகள் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும். இருப்பினும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. நீங்கள் உங்கள் சருமத்தை கவனித்து அதை மேம்படுத்தலாம்,
இயற்கை பொருட்கள் பாதுகாப்பானவை மற்றும் பக்கவிளைவுகள் இல்லாதவை, எனவே அவை எல்லா வயதினரும் பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம். மழைக்காலத்தில் சரியான அழகான சருமத்தைப் பெற உதவும் சில இயற்கையான ஃபேஸ் பேக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ் பேக் #1
* முதலில் ஒரு பௌலில் ரோஸ் வாட்டர் சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ஆரஞ்சு தோல் பவுடர், துவரம் பருப்பு பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #2
உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அப்படியானால் திறந்துள்ள சருமத் துளைகளை சுருக்குவதற்கு ஒரு அற்புதமான ஃபேஸ் பேக் உள்ளது. அது பின்வருமாறு:
* தக்காளியை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைக்க வேண்டும்.
* பின் அந்த உறைய வைக்கப்பட்ட தக்காளி துண்டுகளால் தினமும் சருமத்தை மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #3
உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால், இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் மற்றும் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி குறைந்தது 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதால, சருமத்துளைகள் மூடுவதோடு, முகப்பரு பிரச்சனையும் குறையும்.
ஃபேஸ் பேக் #4
உங்கள் சருமத்தை மென்மையாக்க விரும்பினால் இந்த ஃபேஸ் பேக் பெரிதும் உதவியாக இருக்கும்.
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ஆப்பிள் மற்றும் பீச் துண்டுகளை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.