25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mudi
தலைமுடி சிகிச்சை

முடி வெடிப்பை தடுக்கும் ஹேர் மாஸ்க்

சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில வீட்டில் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம்.

* நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் முனையில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* 1 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதனால், முடி வெடிப்புக்கள் மட்டுமின்றி, முடியின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

* பப்பாளியை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து அலச, முடி வெடிப்புக்கள் மட்டுமல்லாமல், முடியின் மென்மை மற்றும் வலிமை அதிகரிக்கும்.

* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அவற்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைமுடியை நீரில் அலசி, பின் ஈரமான தலையில் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாகவும், வெடிப்புக்களின்றியும் இருக்கும்.
mudi

Related posts

வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…நீளமான கூந்தல் உள்ள ஆண்கள் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது தெரியுமா?

nathan

எலிவால் கூந்தலுக்கு என்னதான் தீர்வு?

nathan

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 கட்டளைகள்…

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

பொடுகால் அவதியா! அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடுகு எண்ணெய்

nathan